ஐஏஎஸ் அப்பாவுக்கு ஐஏஎஸ் மகன்! ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் யுபிஎஸ்சியில் கலக்கல் ரேங்க்!
யுபிஎஸ்சி தேர்வு 2024: ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் 80வது ரேங்க்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு 2024-ன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக, இந்தத் தேர்வில் 57 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
குறிப்பாக, மின்சார வாரியத் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் தனது முதல் முயற்சியிலேயே 80-வது ரேங்க் பெற்று அசத்தியுள்ளார். 27 வயதான அரவிந்த், மருத்துவ அறிவியலை தனது விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். தற்போது அவர் பொது மருத்துவத்தில் முதுகலைப் படிப்பின் இறுதியாண்டு தேர்வை எழுதி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
फाइल फोटो
தனது வெற்றி குறித்து பேசிய அரவிந்த், "நான் செய்தித்தாள்களின் தலையங்கப் பகுதிகளைத் தவறாமல் படிப்பேன். அதுதான் எனது இந்தத் தேர்வுக்கான முதுகெலும்பாக இருந்தது," என்று கூறினார்.
முன்னதாக, அரவிந்த் ராதாகிருஷ்ணன் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்விலும் வெற்றி பெற்று 361-வது இடத்தைப் பிடித்திருந்தார். இருப்பினும், அப்போது அவர் பணியில் சேரவில்லை. விடாமுயற்சியுடன் மீண்டும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வில் பங்கேற்று தற்போது தேசிய அளவில் 80-வது இடத்தைப் பெற்று தனது இலக்கை அடைந்துள்ளார்.
மருத்துவப் படிப்பை முடித்த கையோடு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. தமிழகத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர்த்த அரவிந்த் ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன!