MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பெறுவது எப்படி?

மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பெறுவது எப்படி?

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமாகும். 1958 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இந்திய ஆயுதப் படைகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவி வருகிறது. இந்ந நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Nov 09 2024, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
DRDO jobs

DRDO jobs

டிஆர்டிஓ (DRDO) என்பது பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பல ஆய்வகங்கள் மற்றும் அலகுகளைக் கொண்ட ஒரு முன்னணி ஆராய்ச்சி அமைப்பாகும், விமானம், ஆளில்லா விமானம், தகவல்தொடர்பு அமைப்புகள், ரேடார். மின்னணு போர் உபகரணங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
DRDO Recruitment

DRDO Recruitment

டிஆர்டிஓவில் வேலை பெற, விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பின்வரும் தகுதிகள் பொதுவாக எதிர்பார்க்கப்படுபவை.

விஞ்ஞானி அல்லது பொறியாளர் பணிக்கு, தொழில்நுட்பத் துறையில் இளங்கலை பட்டம் (BE/B.Tech) அல்லது அறிவியல் துறையில் முதுகலை பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும். விண்வெளி பொறியியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இயந்திர பொறியியல், ரசாயன பொறியியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாக பதவிகளுக்கு மேலாண்மை, மனித வளம் அல்லது நிதித்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிகளுக்கு, வெவ்வேறு துறைகளில் பட்டதாரியாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு இருக்கும். சில பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதே போதுமானதாக இருக்கலாம்.

35
DRDO vacancies

DRDO vacancies

விண்ணப்பதாரர்கள் DRDO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (drdo.gov.in ) சென்று வேலை அறிவிப்புகளைப் பார்க்கலாம். தற்போதைய காலிப் பணியிடங்கள், பற்றிய தகவல்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

டிஆர்டிஓவில் பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கணக்கு தொடங்கி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

பல வேலைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்தக் கட்டணத்தில் சலுகைகள் மற்றும் தளர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அதுகுறித்த விவரங்களை அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

45
DRDO opportunities

DRDO opportunities

டிஆர்டிஓ (DRDO) நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை வேலையைப் பொறுத்து மாறுபடலாம். இருப்பினும், பொதுவாக, எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பெரும்பாலான தொழில்நுட்ப பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு சம்பந்தப்பட்ட பாடங்களில் விண்ணப்பதாரர்களின் திறன், பொது அறிவு ஆகியவற்றை மதிப்பிடுவதாக இருக்கும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விப் பின்னணி, ஆராய்ச்சியில் ஆர்வம் முதலியவை குறித்து மூத்த விஞ்ஞானிகளுடன் விவாதிக்கத் தயாராக இருக்கவேண்டும்.

55
DRDO Scientist

DRDO Scientist

டிஆர்டிஓவில் வேலை கிடைத்தால் பல நன்மைகளைப் பெறலாம். DRDO ஒரு அரசு அமைப்பாக இருப்பதால், நிலையான வேலைக்கான உத்தரவாதமாக இருக்கும். கவர்ச்சிகரமான சம்பளத்துடன் அரசாங்க விதிமுறைகளின்படி கூடுதல் பலன்களும் கிடைக்கும்.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் பங்கெடுகுகம் அனுபவத்தைப் பெறலாம். அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கான பங்களிப்பையும் வழங்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image2
8th Pay Commission: 1.83 முதல் 4 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர்? யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?
Recommended image3
Special TET Exam : ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ..TRB அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved