- Home
- Business
- 8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
2026 ஜனவரி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு பென்ஷன் தொகை பெரிய அளவில் மாற வாய்ப்புள்ளது. எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் எனப் பார்க்கலாம்.

சந்தோஷ செய்தி காத்திருக்கு.!
மோடி அரசு கடந்த ஆண்டு தொடக்கத்தில் 8-வது ஊதியக் குழுவை அறிவித்தது. இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதில் எவ்வளவு சம்பளம் உயரும் என இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால், இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Diwali Veg Recipe: தீபாவளிக்கு இந்த வாழைப்பூ புலாவ் செஞ்சு அசத்துங்க! பிரியாணி தோத்துடும்.!
பென்ஷன் கணக்கீடுகள் மாறலாம்.!
8-வது ஊதியக் குழுவின் முடிவுகளால் பென்ஷன் கணக்கீடுகள் மாறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள், புதிய அமைப்பில் தங்களுக்குக் கிடைக்கும் தொகை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
நிதிச் சலுகைகளை வழங்க வேண்டும்.!
பென்ஷன் தொகையைத் திருத்தியமைக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. மேலும், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவதுடன், பணவீக்கத்துக்கு ஏற்ப நிதிச் சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளன.
8th Pay Commission: ரூ.25,000 பென்ஷன் ரூ.87,500 ஆக உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஒன்றரை லட்சம் பென்ஷன் கிடைக்குமா?
புதிய ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.5, 3 அல்லது 3.5 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று அமலானால், தற்போது 25 ஆயிரம், 50 ஆயிரம் அல்லது 75 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்குபவர்களின் தொகை கிட்டத்தட்ட இருமடங்காக மாறும்.
Shani Nakshatra Gochar: அடுத்த 100 நாள்ல இந்த 5 ராசிக்காரங்க தலைவிதி மாறப்போகுது!
புதிய பென்ஷன் தொகை கணக்கீடு.!
தற்போது வாங்கும் அடிப்படை பென்ஷன் தொகையை 2.5, 3 அல்லது 3.5 ஆல் பெருக்கினால், தோராயமான புதிய பென்ஷன் தொகை கிடைக்கும். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், பென்ஷன் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அறிவிப்பு வந்த பிறகே சரியான தொகை தெரியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.





