- Home
- Career
- Govt Subsidy: தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.6 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு! ஈசியா விண்ணப்பிக்கலாம்.!
Govt Subsidy: தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.6 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு! ஈசியா விண்ணப்பிக்கலாம்.!
தமிழ்நாடு அரசின் உழவர் நல சேவை மையம் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், வேளாண் பட்டதாரிகள் 30% அரசு மானியத்துடன் சேவை மையம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கலாம்.

கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு.!
தமிழ்நாடு அரசு 2025-26 ஆண்டிற்காக வெளியிட்டுள்ள முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் படித்த இளைஞர்கள் தங்களுக்கான தனிநபர் தொழிலை எளிதாக தொடங்க முடியும்.
இம்மையங்கள் மூலம் உழவர்களுக்கு விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்கம், நோய் மேலாண்மை, விளைச்சல் உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள் பற்றிய பயிற்சிகளும் இங்கு கிடைக்கும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்யும் இந்த மையங்களுக்கு, அரசு 30% மானியம் வழங்குகிறது. இதன் மூலம் 300 சதுர அடியில் மையம் அமைப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், 600 சதுர அடியில் அமைப்பவர்களுக்கு ரூ.6 லட்சமும் மானியமாக கிடைக்கும். இந்த மானியம் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக உள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் அல்லது வேளாண் வணிகம் தொடர்பான பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்ய தேவையான உரிமங்களை பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அல்லது அரசுசார் நிறுவனங்களில் பணியில் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
விண்ணப்பிக்கும் முறை.!
விருப்பமுள்ளவர்கள் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடன் ஒப்புதல் கிடைத்த பிறகு, AGRISNET இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றி மானிய உதவிக்காக விண்ணப்பிக்கலாம். உரிமங்கள் இல்லாதவர்கள் அதே இணையதளத்தின் மூலம் அவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தொழில் தொடங்கலாம் வாங்க.!
இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு பெரும் ஆதரவாக அமையும் இந்த உழவர் நல சேவை மையத் திட்டம், விவசாய துறையை வலுப்படுத்தும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.