MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாதம் ரூ. 35ஆயிரம் சம்பளம்.! சொந்த ஊரிலேயே வேலை- ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

மாதம் ரூ. 35ஆயிரம் சம்பளம்.! சொந்த ஊரிலேயே வேலை- ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (OSC) பெண்களுக்கான பல்வேறு ஒப்பந்தப் பணி காலியிடங்களை அறிவித்துள்ளார். மைய நிர்வாகி, ஆலோசகர், வழக்கு பணியாளர் முதல் பாதுகாவலர் வரை பல பதவிகள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

3 Min read
Ajmal Khan
Published : Oct 15 2025, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : our own

சொந்த ஊரிலேயே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பானது கிடைத்துள்ளது. அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம். உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

26
Image Credit : Getty

மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப்பணியிடங்கள் 5)

சமூகப் பணியில் முதுகலை பட்டம்(Master's Degree In Social Work /Psychology)பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management)பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும். 

உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப் படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.35,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

Related Articles

Related image1
தமிழகத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
ஃபாக்ஸ்கான் முதலீடு 100% உண்மை! குடும்ப சண்டையை இங்கே காட்டாதீர்கள்! அன்புமணியை விளாசிய டிஆர்பி ராஜா!
36
Image Credit : Ai Meta

மூத்த ஆலோசகர் (Senior Counselor) (காலிப்பணியிடங்கள் 5)

சமூக பணியில் முதுகலைப்பட்டம் M.S.W (Master's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆலோசனை உளவியலில் M.Sc (Counselling Psychology)குறைந்தபட்ச இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட, பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். 

(அல்லது) ஒரு வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது அதற்கு வெளியே பணிபுரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.மாத ஊதியம் ரூ.22,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

46
Image Credit : social media

தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) (காலிப்பணியிடங்கள் 5)

இளங்கலை பட்டப்படிப்பு (B.Tech., B.Sc) மற்றும் Diploma in Computers/IT மற்றும் தர மேலாண்மையியல் (Data Management),செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு (Process Documentation) ഖയയ அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் (Web based reporting formats)-ல் மாநில/மாவட்ட/தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை,உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

வழக்கு பணியாளர்கள் (Case worker) (காலிப்பணியிடங்கள் 30 )

சமூகப் பணியில் இளங்கலை (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.18,000/-ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

56
Image Credit : gemini Ai

பாதுகாப்பாளர் (Security Guard) (காலிப்பணியிடங்கள் 10)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும்24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.மாத ஊதியம் ரூ.12,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும்

செம்மஞ்சேரி

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள் 10)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் மற்றும் அலுவலகத்தை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

66
Image Credit : Asianet News

விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 31.10.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved