MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தனலட்சுமி வங்கியில் சூப்பர் சான்ஸ்: ஜூனியர் ஆபீசர் & அசிஸ்டன்ட் மேனேஜர் வேலைவாய்ப்பு!

தனலட்சுமி வங்கியில் சூப்பர் சான்ஸ்: ஜூனியர் ஆபீசர் & அசிஸ்டன்ட் மேனேஜர் வேலைவாய்ப்பு!

தனலட்சுமி வங்கியில் ஜூனியர் ஆபீசர் மற்றும் அசிஸ்டன்ட் மேனேஜர் காலியிடங்கள். ஏதேனும் ஒரு டிகிரி/PG 60% மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: ஜூலை 12, 2025. 

1 Min read
Author : Suresh Manthiram
Published : Jun 26 2025, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தனலட்சுமி வங்கியில் மத்திய அரசு வேலைகள்!
Image Credit : meta ai

தனலட்சுமி வங்கியில் மத்திய அரசு வேலைகள்!

தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபீசர் மற்றும் அசிஸ்டன்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு அகில இந்திய அளவில் பல்வேறு காலியிடங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜூனியர் ஆபீசர் - உங்களுக்கு காத்திருக்கும் வங்கிப் பணி!
Image Credit : Gemini

ஜூனியர் ஆபீசர் - உங்களுக்கு காத்திருக்கும் வங்கிப் பணி!

பணியின் பெயர்: Junior Officer. இந்தப் பணிக்கான சம்பளம் வங்கி விதிமுறைப்படி வழங்கப்படும். பல்வேறு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்கள் அல்லது 6.0 CGPA & அதற்கு மேல் பெற்ற ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

35
அசிஸ்டன்ட் மேனேஜர் - மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு!
Image Credit : Getty

அசிஸ்டன்ட் மேனேஜர் - மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு!

பணியின் பெயர்: Assistant Manager. இந்தப் பணிக்கான சம்பளமும் வங்கி விதிமுறைப்படி வழங்கப்படும். இதுவும் பல்வேறு காலியிடங்களைக் கொண்ட ஒரு பதவி. இதற்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்கள் அல்லது 6.0 CGPA & அதற்கு மேல் பெற்ற ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் (Any Master’s Degree) அவசியம். வயது வரம்பு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

45
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை!
Image Credit : Getty

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை!

விண்ணப்பக் கட்டணமாக ரூ.708/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.07.2025

55
விண்ணப்பிக்கும் முறை:
Image Credit : freepik

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் [www.dhanbank.com] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
Recommended image2
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்
Recommended image3
TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?
Related Stories
Recommended image1
வங்கி வேலையில் சேர ஆசையா? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ப்ரொபேஷனரி ஆபிசர் வேலை! 541 காலிப்பணியிடங்கள்!
Recommended image2
9-5 வேலை போர் அடிக்குதா? போர்ட்ஃபோலியோ வாழ்க்கைக்கு மாற ஆசையா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved