MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 9195 கான்ஸ்டபிள் வேலைகள்.. 10வது பாஸ் செய்தால் போதும்.. மாதம் ரூ.69,100 சம்பளம்!

9195 கான்ஸ்டபிள் வேலைகள்.. 10வது பாஸ் செய்தால் போதும்.. மாதம் ரூ.69,100 சம்பளம்!

CRPF-ல் 9195 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கடைசி தேதி, தேர்வு முறை போன்ற முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 11 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மத்திய ரிசர்வ் போலீஸ் படை
Image Credit : Getty

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force - CRPF) என்பது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) ஆகும். இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் இப்படை மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்நிலையில் அவ்வப்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். தற்போது நாடு முழுவதும் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு பெரிய அறிவிப்பை வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
CRPF வேலைகள்: எந்தெந்த பிரிவுகளில் காலியிடங்கள்?
Image Credit : Getty

CRPF வேலைகள்: எந்தெந்த பிரிவுகளில் காலியிடங்கள்?

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 9195 பணியிடங்களை நிரப்புகிறார்கள். இதில் கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன், டெக்னிக்கல்) பிரிவில் 9175 பணியிடங்களும், கான்ஸ்டபிள் (பயனீர் விங்) பிரிவில் 20 பணியிடங்களும் உள்ளன. டிரைவர், மோட்டார் மெக்கானிக், கார்பென்டர், டைலர், குக், பார்பர் போன்ற பல டிரேடுகளில் இந்த காலியிடங்கள் உள்ளன.

Related Articles

Related image1
IRCTC-ல் வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது! மாதம் ரூ.30,000 சம்பளம்.. எத்தனை காலி பணியிடங்கள்?
Related image2
Job Alert: 10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.63,000 சம்பளத்துடன் சென்னையில் பணி வாய்ப்பு.!
36
CRPF கான்ஸ்டபிள் தகுதிகள் என்ன?
Image Credit : Getty

CRPF கான்ஸ்டபிள் தகுதிகள் என்ன?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட போர்டில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Transport Vehicle Driving License) கட்டாயம். 21 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் திறன் இருக்க வேண்டும். 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். (SC, ST, OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).

46
CRPF கான்ஸ்டபிள் தேர்வு செயல்முறை எப்படி இருக்கும்?
Image Credit : Getty

CRPF கான்ஸ்டபிள் தேர்வு செயல்முறை எப்படி இருக்கும்?

போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்வார்கள். இதில் நான்கு முக்கிய கட்டங்கள் உள்ளன: 1. கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), 2. உடல் தகுதித் தேர்வு (PET) & உடல் தரநிலைத் தேர்வு (PST), 3. டிரேடு தேர்வு (Trade Test), 4. மருத்துவப் பரிசோதனை.

56
CRPF வேலைகள்: தேர்வு முறை எப்படி இருக்கும்?
Image Credit : Getty

CRPF வேலைகள்: தேர்வு முறை எப்படி இருக்கும்?

எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் மொத்தம் 100 கேள்விகள் இருக்கும். பொது நுண்ணறிவு மற்றும் ரீசனிங் (25), பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் (25), கணிதம் (25), ஆங்கிலம் அல்லது இந்தி (25) என நான்கு பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 நெகட்டிவ் மார்க் உண்டு. மாத சம்பளம் ரூ. 21,700 முதல் 69,100 வரை.

66
CRPF அறிவிப்பு: எங்கே விண்ணப்பிப்பது?
Image Credit : Getty

CRPF அறிவிப்பு: எங்கே விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கும் நாள் - ஏப்ரல் 20. கடைசி தேதி மே 19. பொது, ஓபிசி, EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. SC, ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. கூடுதல் விவரங்களுக்கு crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Zepto-வில் டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி? எவ்வளவு சம்பாதிக்கலாம்? முழு விவரம்!
Recommended image2
Business Ideas for Women: வீட்டிலிருந்தே பிசினஸ் செய்ய ஆசையா?! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க உதவும் 5 சிறந்த பிசினஸ் ஐடியாக்கள்!
Recommended image3
Railway Jobs: 10வது பாஸ் போதும்! ரயில்வேயில் 6500+ வேலைகள்... சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
Related Stories
Recommended image1
IRCTC-ல் வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது! மாதம் ரூ.30,000 சம்பளம்.. எத்தனை காலி பணியிடங்கள்?
Recommended image2
Job Alert: 10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.63,000 சம்பளத்துடன் சென்னையில் பணி வாய்ப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved