- Home
- Career
- மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் ஆக ஆசையா? இலட்சங்களில் சம்பளம் அள்ளலாம்! உடனே விண்ணபிக்கவும்…
மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் ஆக ஆசையா? இலட்சங்களில் சம்பளம் அள்ளலாம்! உடனே விண்ணபிக்கவும்…
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உடனே விண்ணப்பியுங்கள்.

மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி
தமிழ்நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் (CUTN), தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து பல்வேறு கற்பித்தல் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. நேரடியாக நிரப்பப்படும் இந்தப் பணியிடங்கள், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இது ஒரு சுழல் விளம்பரம் (Rolling advertisement) என்பதால், ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்ப்பது அவசியம்.
காலியிடங்கள் மற்றும் துறைகள்
இந்த அறிவிப்பின்படி, மத்திய பல்கலைக்கழகத்தில் மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், மற்றும் உதவிப் பேராசிரியர் பதவிகள் அடங்கும். இந்த காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளான சமூக அறிவியல், பயன்பாட்டு உளவியல், வணிகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, சட்டம், ஊடகம் மற்றும் தொடர்பு, இசை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை, உடற்கல்வி மற்றும் விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளன.
கல்வித் தகுதியும், விண்ணப்பிக்கும் முறையும்
பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பிஎச்.டி (Ph.D.) பட்டம் கட்டாயத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், யுஜிசி அல்லது சிஎஸ்ஐஆர் (UGC or CSIR) நடத்திய தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி பட்டம் பெற்றவர்களுக்கு சில விதிமுறைகளின் கீழ் NET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சமார்த் இணையதளத்தின் (Samarth portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் மற்றும் இதர தகவல்கள்
ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18, 2025 அன்று தொடங்கி, செப்டம்பர் 17, 2025 அன்று இரவு 11:59 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தின் அச்சுப் பிரதி மற்றும் தேவையான ஆவணங்களை செப்டம்பர் 27, 2025 அன்று அல்லது அதற்கு முன், பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹750 ஆகும். அதேசமயம், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. முழுமையான விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.