MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Bank Job Without Exam: கனரா வங்கியில் 3,500 வேலைவாய்ப்பு! தேர்வே இல்லை.. ரூ.16,650 சம்பளம்..

Bank Job Without Exam: கனரா வங்கியில் 3,500 வேலைவாய்ப்பு! தேர்வே இல்லை.. ரூ.16,650 சம்பளம்..

கனரா வங்கியில் 3,500 அப்ரண்டீஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எழுத்துத் தேர்வு இன்றி மெரிட் அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் அக்டோபர் 17, 2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

3 Min read
Author : Asianet News
Published : Oct 03 2026, 07:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வங்கி வேலை வாய்ப்பு..!
Image Credit : Pinterest

வங்கி வேலை வாய்ப்பு..!

பட்டப்படிப்பு முடித்துவிட்டு வங்கி துறையில் அனுபவம் பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு கனரா வங்கி புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. 2026-27 நிதியாண்டிற்காக நாடு முழுவதும் 3,500 Graduate Apprentice பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 391 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பின் முக்கிய சிறப்பு, வழக்கமான வங்கி ஆட்சேர்ப்பைப் போல எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதில்லை. விண்ணப்பதாரர்களின் 12ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ மதிப்பெண் அடிப்படையில் மாநில வாரியான மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின்னர் ஆவண சரிபார்ப்பு, தேவையான இடங்களில் உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.

3,500 இடங்களில் தமிழகத்திற்கு 391!

கனரா வங்கியின் அறிவிப்பின்படி மொத்தம் 3,500 பயிற்சி இடங்கள் உள்ளன. மாநில வாரியாக குறிப்பிடத்தக்க காலியிடங்கள்:

• கர்நாடகா – 581

• உத்தரப் பிரதேசம் – 409

• தமிழ்நாடு – 391

• ஆந்திரப் பிரதேசம் – 247

• கேரளா – 240

• மகாராஷ்டிரா – 205

• மேற்கு வங்கம் – 150

• தெலங்கானா – 134

• பீகார் – 122

• ஹரியானா – 114

• மத்தியப் பிரதேசம் – 110

• ஒடிசா – 104

தமிழ்நாட்டில் உள்ள 391 இடங்களில் SC, ST, OBC, EWS மற்றும் பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

யார் விண்ணப்பிக்கலாம்?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எந்தப் பாடப்பிரிவிலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. விண்ணப்பதாரர் தனது பட்டப்படிப்பை 01.01.2023 முதல் 01.09.2026க்குள் முடித்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்புக்கு தகுதியற்றவர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வயது வரம்பு என்ன?
Image Credit : Pinterest

வயது வரம்பு என்ன?

01.09.2026 அன்று 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அதாவது, விண்ணப்பதாரர் 02.09.1998 முதல் 01.09.2006 வரை பிறந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி:

• SC/ST – 5 ஆண்டுகள்

• OBC (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்

• PwBD – 10 ஆண்டுகள்

என வயது தளர்வு வழங்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு சில பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் கூடுதல் வயது சலுகை உள்ளது.

எழுத்துத் தேர்வு இல்லை.. ஆனால் மெரிட் முக்கியம்!

இந்த ஆட்சேர்ப்பில் தனி எழுத்துத் தேர்வு இல்லை. விண்ணப்பித்தவர்களின் 12ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் மாநில வாரியாக மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும்.

பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 60%, SC/ST/PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண் 12ஆம் வகுப்பு/டிப்ளமோவில் இருக்க வேண்டும்.

ஒரே மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால், வயதில் மூத்தவர்களுக்கு மெரிட் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும்.

உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்!

விண்ணப்பிக்கும் மாநிலத்திற்கு ஏற்ப உள்ளூர் மொழி அறிவு முக்கியமானது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழி அறிவு கொண்டிருக்க வேண்டும். 10 அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அந்த உள்ளூர் மொழியைப் படித்திருப்பது நிரூபிக்கப்பட்டால் தனியாக மொழித் தேர்வு எழுத வேண்டியதில்லை.

அப்படி சான்று இல்லாதவர்களுக்கு Document Verification நேரத்தில் உள்ளூர் மொழித் தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி பெறாவிட்டால் அப்ரண்டீசாக சேர முடியாது.

34
மாதம் ரூ.16,650 உதவித்தொகை!
Image Credit : Pinterest

மாதம் ரூ.16,650 உதவித்தொகை!

தேர்வு செய்யப்படும் அப்ரண்டீஸ்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் மாதம் ரூ.16,650 உதவித்தொகை வழங்கப்படும்.

இதில் கனரா வங்கி சார்பில் மாதம் ரூ.10,500 வழங்கப்படும். மீதமுள்ள ரூ.6,150 அரசு பங்காக DBT மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நிரந்தர வங்கி வேலை அல்ல!

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான். இது Apprentices Act, 1961 கீழ் வழங்கப்படும் 12 மாத பயிற்சி வாய்ப்பு. அப்ரண்டீஸ்கள் கனரா வங்கியின் நிரந்தர ஊழியர்களாக கருதப்பட மாட்டார்கள்.

மேலும், பயிற்சி முடிந்த பிறகு கனரா வங்கி நிரந்தர வேலை வழங்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. பயிற்சி நிறைவடைந்ததும் அந்தப் பயிற்சி ஒப்பந்தம் முடிவடையும்.

ஒரு மாநிலத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும்

விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பில் ஒரே ஒரு மாநிலத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வு செய்த மாநிலத்திற்குள் மாவட்டங்களுக்கு முன்னுரிமை வரிசையை குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஆனால் இறுதியில் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தை வங்கியின் நிர்வாகத் தேவைக்கு ஏற்ப கனரா வங்கி ஒதுக்க முடியும்.

44
யார் விண்ணப்பிக்க முடியாது?
Image Credit : Getty

யார் விண்ணப்பிக்க முடியாது?

ஏற்கனவே கனரா வங்கி அல்லது வேறு நிறுவனத்தில் Apprenticeship Training முடித்தவர்கள் அல்லது தற்போது Apprenticeship பயிற்சியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், பட்டப்படிப்பு முடித்த பிறகு ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வேலை/பயிற்சி அனுபவம் பெற்றவர்களும் இந்த அப்ரண்டீஸ் வாய்ப்புக்கு தகுதியற்றவர்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் National Apprenticeship Training Scheme (NATS) இணையதளத்தில் பதிவு செய்து, உங்கள் சுயவிவரத்தை 100% முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு கிடைக்கும் Enrollment ID-ஐ பயன்படுத்தி கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் 01.10.2026 முதல் 17.10.2026 வரை நடைபெறுகிறது. வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்களை வங்கி ஏற்காது.

விண்ணப்பக் கட்டணம்:

• SC/ST/PwBD – கட்டணம் இல்லை

• மற்றவர்கள் – ரூ.500

கட்டணம் திரும்ப வழங்கப்படாது.

விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், இடது கை கட்டைவிரல் ரேகை மற்றும் ஆங்கிலத்தில் கையால் எழுதப்பட்ட Declaration ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும்.

முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது

இந்த வாய்ப்பு பட்டப்படிப்பு முடித்த புதியவர்களுக்கு வங்கி துறையில் ஒரு வருட நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கான பயிற்சி வாய்ப்பு. ஆனால் இது நிரந்தர Canara Bank employee பதவி அல்ல என்பதையும், தேர்வு இல்லாவிட்டாலும் 12ஆம் வகுப்பு/டிப்ளமோ மதிப்பெண்களில் குறைந்தபட்ச தகுதி மற்றும் மெரிட் போட்டி இருப்பதையும் விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2026. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, NATS பதிவை முடித்த பிறகே கனரா வங்கி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
வேலை வாய்ப்பு
தொழில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Training: 8th முடித்தவர்களும் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! 30 நாள் பயிற்சிக்கு பின் வேலை கன்பார்ம்.! எங்க நடக்குது தெரியுமா?
Recommended image2
D-Mart Shopping: ரூ.2,000 பட்ஜெட்டில் மளிகைப் பொருட்கள் வாங்குவது எப்படி? பணத்தை மிச்சப்படுத்தும் டிப்ஸ்!
Recommended image3
8TH PAY COMMISSION: சம்பளம் எத்தனை மடங்கு உயரும்? 8-வது ஊதியக் குழுவின் சமீபத்திய ஸ்டேட்டஸ்.!
Related Stories
Recommended image1
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!
Recommended image2
Bank Account Death Claim: வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணத்தை பெறுவது எப்படி? நாமினி முதல் வாரிசு வரை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved