12ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? அதிக சம்பளம் தரும் 5 சிறந்த கேரியர் ஆப்ஷன்கள்
12ம் வகுப்பு முடிந்ததும் “அடுத்தது என்ன?” என்ற கேள்வி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் சரியான கேரியர் தேர்வு தான் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும் ரகசியம்.

12ம் பிறகு கேரியர் ஆப்ஷன்
ப்ளஸ் டூ முடிந்ததும் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பெரிய கேள்வியாக எழுந்து நிற்கும். “இப்போ என்ன படிக்கலாம்?” என்ற கேள்வி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒரே நேரத்தில் சிந்திக்க வைக்கும். பழைய காலத்தில் மருத்துவர் அல்லது பொறியாளர் என்ற இரண்டு பாதைகள் மட்டும் இருந்ததாக நினைத்தாலும், இன்றைய உலகம் பல புதிய வாய்ப்புகளால் நிரம்பி வழிகிறது. சரியான துறையை தேர்வு செய்வது வெறும் வேலைக்காக அல்ல. அது உங்கள் வருமானம், சமூக மதிப்பு, வாழ்க்கை சமநிலை ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கிய முடிவாக மாறுகிறது.
மாணவர்களுக்கு கேரியர் வழிகாட்டி
இப்போது வேலைக்காக மட்டும் படிப்பது போதாது. உங்கள் திறமையும் ஆர்வமும் இணையும் துறையை தேர்வு செய்வது அவசியம். பலர் “எல்லாரும் இதுதான் படிக்கிறார்கள்” என்று கூட்டத்தை பின்தொடர்கிறார்கள். ஆனால் அந்த பாதை எல்லோருக்கும் வேலை தராது. உங்களுக்கு பிடித்த விஷயத்தில் பயணம் செய்தால் தான் நீண்ட காலத்தில் வளர்ச்சி கிடைக்கும். அதனால் உங்கள் பலவீனங்கள், பலம், விருப்பங்கள் அனைத்தையும் மதிப்பிட்டு தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவு.
டேட்டா சயின்ஸ் கோர்ஸ்
டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகள் இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. சமூக ஊடகங்கள், ஆன்லைன் வணிகம், டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் தரவின் மீது இயங்குகின்றன. அந்தத் தரவை புரிந்து கொண்டு நிறுவனங்களுக்கு சரியான முடிவை எடுக்க உதவும் நிபுணர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. கணிதம், லாஜிக் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த துறையை தேர்வு செய்தால் நல்ல ஆரம்ப சம்பளத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளும் அதிகம்.
சட்டத் துறையில் வேலை
சட்டத் துறையும் தற்போது புதிய உயரத்தை எட்டியுள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில், கார்ப்பரேட் உலகிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பி.ஏ. LLB அல்லது BBA LLB போன்ற ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் மூலம் நேரடியாக இந்தத் துறைக்கு செல்லலாம். மேலும், மேலாண்மை துறையில் ஆர்வம் உள்ளவர்கள் IPM (நிர்வாகத்தில் ஒருங்கிணைந்த திட்டம்) தேர்வு செய்து நேரடியாக மேலாண்மை கல்வியை தொடங்கலாம். இது நேரத்தையும் சேமிக்கிறது, தொழில் பாதையையும் விரைவாக அமைக்க உதவுகிறது.
இந்திய ராணுவத்தில் வேலை
தேச சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் NDA மூலம் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேரலாம். இது ஒரு வேலை மட்டும் அல்ல. மரியாதை, ஒழுக்கம், நாட்டுப்பற்று ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறை. அதே சமயம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கண்டென்ட் கிரியேஷன் துறைகளும் இன்றைய இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. சமூக ஊடக வளர்ச்சியுடன், படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு உலகளாவிய அளவில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. சரியான தேர்வு செய்தால், உங்கள் வாழ்க்கை பாதை வெற்றியின் வெளிச்சத்தில் ஒளிரும்.

