MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 8TH PAY COMMISSION: சம்பளம் எத்தனை மடங்கு உயரும்? 8-வது ஊதியக் குழுவின் சமீபத்திய ஸ்டேட்டஸ்.!

8TH PAY COMMISSION: சம்பளம் எத்தனை மடங்கு உயரும்? 8-வது ஊதியக் குழுவின் சமீபத்திய ஸ்டேட்டஸ்.!

8-வது ஊதியக் குழு 18 மாதத்தில் 11 மாசம் முடிந்தது! அக்டோபர் 7-8 பெங்களூரு கூட்டம், ரிப்போர்ட் எப்போ வரும்? மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான சமீபத்திய அப்டேட் இதோ.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 02 2026, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பெங்களூருவை நோக்கி திரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் கவனம்
Image Credit : Asianet News

பெங்களூருவை நோக்கி திரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் கவனம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கவனம் தற்போது பெங்களூருவை நோக்கி திரும்பியுள்ளது. அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் 8-வது மத்திய ஊதியக் குழுவின் முக்கிய கூட்டங்கள் அங்கு நடைபெற உள்ளன. இதையடுத்து அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் மும்பையிலும் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குழு நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் கருத்துக்களை நேரடியாகக் கேட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
நாடு முழுவதும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்கள்
Image Credit : gemini

நாடு முழுவதும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்கள்

இதுவரை குழு 14-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று நூற்றுக்கணக்கான ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. டெல்லியில் மட்டும் அமர்ந்து கொள்ளாமல், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஊழியர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்பது இந்தக் குழுவின் முக்கிய அணுகுமுறையாக உள்ளது. சமீபத்தில் செப்டம்பர் 7-8 தேதிகளில் சென்னையிலும், செப்டம்பர் 9-ல் புதுச்சேரியிலும், செப்டம்பர் 16-18 தேதிகளில் சண்டிகரிலும் கூட்டங்கள் நடைபெற்றன. சண்டிகர் கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்கங்கள் பங்கேற்றன.

38
18 மாத காலக்கெடுவில் 11 மாசம் நிறைவு
Image Credit : GEMINI

18 மாத காலக்கெடுவில் 11 மாசம் நிறைவு

நவம்பர் 3, 2025 அன்று நிதி அமைச்சகத்தின் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்ட இந்தக் குழுவுக்கு மொத்தம் 18 மாத காலம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது (அக்டோபர் 2026 தொடக்கத்தில்) ஏறக்குறைய 11 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இன்னும் சுமார் 7 மாதங்கள் மட்டுமே மீதமுள்ளன. குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் உள்ளார். பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும் செயல்படுகின்றனர்.

48
அப்பாயிண்ட்மெண்ட் மற்றும் மெமோராண்டம் விவரங்கள்
Image Credit : Asianet News

அப்பாயிண்ட்மெண்ட் மற்றும் மெமோராண்டம் விவரங்கள்

ஆகஸ்ட் 24, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, விருப்பமுள்ள சங்கங்கள் செப்டம்பர் 18-க்குள் பெங்களூரு கூட்டத்திற்கான அப்பாயிண்ட்மெண்ட் கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மெமோராண்டம் சமர்ப்பித்தபோது கிடைத்த யூனிக் மெமோ ஐடியையும் சேர்த்து அனுப்ப வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மும்பை கூட்டத்திற்கான கடைசி தேதி அக்டோபர் 10 ஆகும்.

58
சம்பள அமைப்பு மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் விவாதங்கள்
Image Credit : Asianet News

சம்பள அமைப்பு மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் விவாதங்கள்

இந்தக் கூட்டங்களில் பெரும்பாலும் சம்பள அமைப்பு மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்தே விவாதங்கள் நடைபெறுகின்றன. புதிய ஊதியக் குழுவில் அடிப்படை சம்பளம் எத்தனை மடங்கு உயரும் என்பதைக் கணக்கிட ஃபிட்மென்ட் ஃபேக்டர் முக்கிய அடிப்படையாக அமைகிறது. இதனால் ஊழியர்கள் மத்தியில் இது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சில சங்கங்கள் 3.83 அல்லது அதற்கு மேற்பட்ட ஃபிட்மென்ட் ஃபேக்டரைக் கோரியுள்ளன. குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ₹69,000 வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

68
டிஏ/டிஆர் மற்றும் பிற கோரிக்கைகள்
Image Credit : GEMINI

டிஏ/டிஆர் மற்றும் பிற கோரிக்கைகள்

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மூன்று மாத சராசரியை வைத்து காலாண்டுக்கு ஒருமுறை டிஆர் (Dearness Relief) அப்டேட் செய்ய வேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் கோரியுள்ளன. டிஏ/டிஆர் 25 சதவீதத்தைத் தாண்டினால் அதை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இவை அனைத்தும் இன்னும் பரிசீலனையில் உள்ளன. எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

78
ரிப்போர்ட் எப்போ தாக்கல் ஆகும்?
Image Credit : X

ரிப்போர்ட் எப்போ தாக்கல் ஆகும்?

குழுவின் முழுமையான அறிக்கை 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2027-க்குள் இறுதிப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல்களும் உள்ளன. 18 மாத கணக்குப்படி 2027 மே-ஜூன் காலகட்டமே இலக்காக உள்ளது. சில நிபுணர்கள் மற்றும் சங்கத் தலைவர்கள் பிப்ரவரி-மார்ச் 2027-க்குள் வர வாய்ப்புள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ காலக்கெடு மே 2027 ஆகும். தேவைப்பட்டால் குழு நீட்டிப்பு கோரலாம்.

88
அரசு தான் இறுதி முடிவு எடுக்கும்
Image Credit : AI

அரசு தான் இறுதி முடிவு எடுக்கும்

ஊதியக் குழு சம்பளத்தை நேரடியாக அறிவிக்காது. அது பரிந்துரைகளை மட்டுமே சமர்ப்பிக்கும். அறிக்கை கிடைத்த பிறகு எந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது என்பதை அரசுதான் முடிவு செய்யும். அதன்பிறகு அறிவிப்பு வெளியிடப்படும். பொதுவாக பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் பின்னோக்கி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால் அரியர்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, மீட்டிங்குகள் மற்றும் கோரிக்கைகள் எவ்வளவு நடந்தாலும், புதிய சம்பள அளவு இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கூட்டங்களின் முடிவுகளையும், அடுத்தடுத்த அறிவிப்புகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு 8-வது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
8வது ஊதியக்குழு
7வது ஊதியக் குழு
ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு வேலைகள்
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?
Recommended image2
8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்
Recommended image3
TNPSC Hall Ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வர்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
Related Stories
Recommended image1
8th Pay Commission: சிவிலியன் பென்ஷனர்களுக்கும் 'ஒரே ரேங்க் ஒரே பென்ஷன்'.! 8வது ஊதியக் குழுவிடம் கோரிக்கை
Recommended image2
8th Pay Commission: 8-வது சம்பள கமிஷனில் என்ன சர்ப்ரைஸ்? நிறைவேறுகிறது ஓய்வூதியதாரர்களின் 12 கோரிக்கைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved