MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 8TH PAY COMMISSION: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! ரூ.72,000 குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்! இனி ஜாலியோ ஜிம்கானாதான்!

8TH PAY COMMISSION: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! ரூ.72,000 குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்! இனி ஜாலியோ ஜிம்கானாதான்!

த்திய ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! 8வது ஊதிய ஆணையத்தில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.72,000 வரை கோரிக்கை. NC-JCM ரூ.69,000, BPMS ரூ.72,000 மற்றும் ஃபிட்மென்ட் 4 முன்மொழிவு. அக்டோபர் கூட்டங்கள் முக்கியம்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 28 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு.!
Image Credit : Asianet News

கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு.!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் வந்திருக்கும் செய்தி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 8வது ஊதிய ஆணையம் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக இருந்தாலும், சில முக்கிய ஊழியர் சங்கங்கள் அதை ரூ.69,000 முதல் ரூ.72,000 வரை உயர்த்துமாறு வலுவாகக் கோரியுள்ளன. NC-JCM அமைப்பு குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.69,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 3.833 ஆகவும், ஆண்டு ஊதிய உயர்வை தற்போதைய 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் உயர்த்துமாறு கோரியுள்ளது. அதே நேரத்தில் BPMS அமைப்பு இன்னும் ஒரு படி மேலே சென்று குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.72,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 4 ஆகவும், ஆண்டு உயர்வை 6 சதவீதமாகவும் நிர்ணயிக்குமாறு முன்மொழிந்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் தற்போதைய பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தனிநபர் வருமான உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இதையும் படிக்கலாமே - 8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர், ஓய்வூதியம்… 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் – தவறவிடாதீர்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சாதக சிக்னலை தரும் ஃபிட்மென்ட் காரணி
Image Credit : gemini

சாதக சிக்னலை தரும் ஃபிட்மென்ட் காரணி

ஃபிட்மென்ட் காரணி என்பது தற்போதைய அடிப்படை ஊதியத்தை புதிய அடிப்படை ஊதியமாக மாற்றும் பெருக்கல் எண்ணாகும். அதாவது புதிய அடிப்படை ஊதியம் = தற்போதைய அடிப்படை ஊதியம் × ஃபிட்மென்ட் காரணி என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது. இதன்படி ஃபிட்மென்ட் காரணி 3.833 ஆனால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் சுமார் ரூ.69,000 ஆகவும், 4 ஆனால் ரூ.72,000 ஆகவும் உயர வாய்ப்புள்ளது. எனினும் இது வெறும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளே தவிர இன்னும் இறுதி முடிவு அல்ல. ஆணையம் இன்னும் தனது பரிந்துரைகளை முழுமையாக தயாரிக்கவில்லை. DA, HRA போன்ற படிகளும் புதிய அடிப்படை ஊதியத்துடன் மீண்டும் கணக்கிடப்படும் என்பதால் மொத்த ஊதிய உயர்வு ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்தே அமையும். இதையும் படிக்கலாமே -  Farmers Subsidy: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம்.! 50% வரை மானியம்.! யாருக்கு கிடைக்கும்?

35
18 மாத கால அவகாசம்
Image Credit : AI

18 மாத கால அவகாசம்

8வது ஊதிய ஆணையம் 2025 நவம்பர் 3 அன்று அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. அதற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அறிக்கை 2027 நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பு தேதி ஜனவரி 1, 2026 ஆகும். தற்போது ஆணையம் நாடு முழுவதும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. வரும் அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் பெங்களூரிலும், அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் மும்பையிலும் முக்கியக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்களில் ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் அமைப்புகளும் தங்கள் கருத்துகளை நேரில் முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். இதையும் படிக்கலாமே - D-Mart Return & Exchange: டி-மார்ட்டில் வாங்கிய பொருளில் பிரச்சினை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

45
ஒப்புதல் கிடைத்த பிறகே ஜாக்பாட் தேதி தெரியவரும்
Image Credit : Asianet News

ஒப்புதல் கிடைத்த பிறகே ஜாக்பாட் தேதி தெரியவரும்

இவை தவிர ஆண்டு ஊதிய உயர்வை 6 சதவீதமாக உயர்த்துதல், குடும்ப அளவை 3 பேரிலிருந்து 5 பேராக கணக்கிடுதல், HRA அதிகரிப்பு, ஓய்வூதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் இப்போது பேசப்படும் அனைத்து எண்களும் முன்மொழிவுகளே. ஆணையத்தின் இறுதி பரிந்துரைகளும் மத்திய அரசின் ஒப்புதலும் கிடைத்த பிறகே உண்மையான ஊதிய உயர்வு தெளிவாகும். இதையும் படிக்கலாமே - Milk paneer: ஒரிஜினல் பன்னீர் vs போலி பன்னீர்.! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

55
இனி ஜாலியோ ஜிம்கானாதான்
Image Credit : Asianet News

இனி ஜாலியோ ஜிம்கானாதான்

தீபாவளிக்கு முன் வந்திருக்கும் இந்த செய்திகள் மத்திய ஊழியர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளன. “இனி ஜாலியோ ஜிம்கானாதான்” என்ற உற்சாகம் அவர்களிடையே பரவியிருந்தாலும், இன்னும் சில மாதங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை நிலை. ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் அக்டோபர் கூட்டங்களின் முடிவுகளையும் உற்றுநோக்கி வரும் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதையும் படிக்கலாமே - SCIENCE: முதலில் வந்தது கோழிதான்.! கொக்கரக்கோ விடுகதைக்கு விடை கிடைச்சாச்சு.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
8வது ஊதியக்குழு
ஊதியக்குழு
7வது ஊதியக் குழு
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு வேலைகள்
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு
முதலீடு
முதலீடு
வணிகம்
தொழில்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
RRB Recruitment 2026: +2 படித்தவர்களுக்கு ரயில்வே வேலை! மாதம் ரூ.44,900 வரை சம்பளம்
Recommended image2
8th Pay Commission: ஓய்வூதியதாரர்களின் 11 முக்கிய கோரிக்கைகள்.. மாத ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!
Recommended image3
Salary Hike DA Rise: அரசு ஊழியர்களுக்கு டபுள் குட்நியூஸ்.. DA உயர்வு முதல் புதிய சம்பளம் வரை!
Related Stories
Recommended image1
8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர், ஓய்வூதியம்… 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் – தவறவிடாதீர்கள்!
Recommended image2
8th Pay Commission pension: லெவல் 1-18 ஊழியர்களுக்கு ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் ஏன் முக்கியக் கோரிக்கையாக உள்ளது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved