600 பேரின் வேலையைச் செய்யும் AI! வேலை இழப்பு அபாயத்தில் ஜொமேட்டோ ஊழியர்கள்!
Zomato Lays Off: உணவு டெலிவரி நிறுவனமான ஜெமேட்டோ 600 வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ZAAP திட்டம், மந்தநிலை, பிளிங்க்இட் இழப்புகள், AI முதலீடு ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது. ஊழியர்கள் எதிர்காலம் குறித்து கவலையில் உள்ளனர்.

Zomato Lays Off 600 Employees
உணவு டெலிவரி நிறுவனமான ஜெமேட்டோ (Zomato) சமீபத்தில் சுமார் 600 வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது அதன் வேலைவாய்ப்பு உத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. நிறுவனத்திற்குள் பல்வேறு ஊழியர்களை மாற்றுவதற்காக Zomato Associate Accelerator Program (ZAAP) என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதன் மூலம் வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மையாக குருகிராம் மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களில் பணிபுரிந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
Zomato Lays Off
விற்பனை, திட்ட மேலாண்மை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காக ZAAP வடிவமைக்கப்பட்டது என ஜெமோட்டோ கூறுகிறது. இருப்பினும், ஒப்பந்த ஊழியர்களில் பலரது ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
Zomato Lays Off
"கடந்த ஆண்டு ஜொமேட்டோவின் ZAAP திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக எந்த தெளிவான விளக்கமும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.
Zomato Lays Off
ஜெமேட்டோவின் பிரதான வணிகமான உணவு விநியோகத்தில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் அதன் இணை நிறுவனமான பிளிங்க்இட் (Blinkit) சந்தித்து வரும் இழப்புகள் காரணமாக இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெமேட்டோ செலவுகளைக் குறைக்க தானியங்கித் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகிறது.
Zomato Lays Off
AI மூலம் இயங்கும் வாடிக்கையாளர் ஆதரவு தளமான Nugget இன் பயன்பாடு முக்கிய முதலீடாக உள்ளது. இந்த தளம் மாதந்தோறும் 15 மில்லியனுக்கும் அதிகமான தொடர்புகளை நிர்வகிக்க முடியும் என்றும் மனித தலையீடு இல்லாமல் 80% வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, தீர்வு காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
Zomato Lays Off
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் எந்த முன்னறிவிப்பு காலமும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மோசமான செயல்திறன், நேரம் தவறுதல் ஆகியவை இந்த பணிநீக்கங்களுக்குக் கூறப்பட்ட சில காரணங்களாக உள்ளன. "ஒரு அபத்தமான, நியாயமற்ற காரணத்திற்காக நான் ஜொமேட்டோவிலிருந்து நீக்கப்பட்டேன்" என்று ஒரு முன்னாள் ஊழியர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
டிசம்பர் 2022 இல், ஜெமேட்டோ பல்வேறு துறைகளில் சுமார் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அதன் பணியாளர்களில் கிட்டத்தட்ட 4% ஆகும். தற்போதைய ஊழியர்களும் அதிகரித்து வரும் ஆட்டோமேஷன் முதலீடு காரணமாக, வேலையில் நீடிக்க முடியுமா என்ற கவலையில் உள்ளனர். குறிப்பாக, AI பயன்பாடு வாடிக்கையாளர் சேவை பணிகளில் மனிதர்களின் தலையீட்டை வெகுவாகக் குறைத்துள்ளது.
Zomato Lays Off
பணிநீக்க நடவடிக்கை இருந்தாலும் ஜெமேட்டோ பங்குகள் தொடர்ந்து உயர்ந்துள்ளன. இது நிறுவனத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குறிக்கிறது. இருந்தாலும் ஜொமேட்டோ ஊழியர்கள் பணியில் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதால், நிறுவனத்திற்குள் பதட்டமான சூழ்நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.