- Home
- Business
- மாதம் ரூ.6,800 வரை வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் கிடைக்கும் வருமானம்.. சிறந்த சேமிப்பு திட்டம்
மாதம் ரூ.6,800 வரை வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் கிடைக்கும் வருமானம்.. சிறந்த சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8.2% வட்டி விகிதத்தில் சிறந்த வருமானத்தை வழங்குகிறது. இத்திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து, மாதம் சுமார் ரூ.6,800 வரை நிலையான வருமானம் பெறலாம்.

தபால் நிலைய சேமிப்பு திட்டம்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திட்டம் தான் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). இதன் வட்டி விகிதம் காலாண்டுக்கு 8.2% ஆகும். இது வங்கிகளை விட அதிக வருமானம் தரும் முதலீடு. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தற்போது (2025-26 இரண்டாம் காலாண்டு) SCSS வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை கணக்கில் வரவு வைக்கப்படும்.
இது மூத்த குடிமக்களுக்கு ஒரு வழக்கமான வருமானமாகப் பயன்படும். உதாரணமாக, இத்திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.82,000 வட்டி கிடைக்கும். காலாண்டுக்கு ரூ.20,500 வட்டி வரும்.
தபால் துறை முதலீட்டு திட்டம்
இதன் மூலம், மாதத்திற்குச் சராசரியாக ரூ.6,833 வரை பெறலாம். அதாவது, SCSS-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்த மூத்த குடிமகனுக்கு மாதம் சுமார் ரூ.6,800 வருமானம் கிடைக்கும். SCSS முதலீட்டிற்கு வருமான வரிச் சட்டம் 80C-யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.
வட்டிக்கு வரி விதிக்கப்பட்டாலும், அதிக வட்டி விகிதத்தால் நிகர லாபம் குறையாது. ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் விரும்புவோருக்கு இது ஒரு நல்ல திட்டம். திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள்.
தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். ஒரு வருடத்திற்குள் பணத்தை எடுத்தால் வட்டி லாபம் கிடைக்காது. 1-2 ஆண்டுகளில் எடுத்தால் 1.5% அபராதம். 2-5 ஆண்டுகளில் எடுத்தால் 1% அபராதம். கணவன்-மனைவி சேர்ந்து கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

