மூத்த குடிமக்களுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம்.. SCSS vs வங்கி FD.. எது நல்ல லாபம்.?
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில், வங்கி FD-க்கள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) நல்ல வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் பற்றி விரிவான விவரங்களை பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள்
இந்தியாவில் வயது முதிர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் கிடைக்க சில சிறப்பு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. பலர் இன்றும் வங்கி நிலையான வைப்பு (FD) மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக வங்கிகள் FD வட்டியை குறைத்ததால், வயதான முதலீட்டாளர்கள் மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மிகவும் முக்கியமான தேர்வாக உருவெடுத்து வருகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) திட்டம் வயது 60க்கும் மேற்பட்டவர்களுக்காக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சேமிப்பு திட்டம். இந்தத் திட்டத்தின் முக்கிய வலிமை வட்டிவிகிதம். தற்போதைய வட்டி விகிதம் 8.2%, இது ஒவ்வொரு 3 மாதங்களிலும் வட்டி வழங்கப்படும். இந்த கணக்கை தபால் நிலையம் அல்லது வங்கி வழியாக திறக்கலாம்.
வரிச்சலுகை கிடைக்கும்
திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள், மேலும் விருப்பமுள்ளவர்கள் 3 ஆண்டுகள் கூட நீட்டிக்கலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவு கீழ் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதால் வரிச்சலுகை கிடைக்கும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 முதலாக, அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது வாழ்க்கை துணையாகவோ கணக்கு திறக்கலாம்.
வங்கி FD வட்டி விகிதங்கள்
தற்போது 5 ஆண்டு FD-க்கு வங்கிகள் வழங்கும் வட்டி:
எஸ்பிஐ 7.05%
கனரா வங்கி 6.75%
PNB 6.8%
HDFC 6.90%
ஐசிஐசிஐ 7.10%
ஆக்சிஸ் வங்கி 7.35%
எது சிறந்தது?
இந்த எண்ணிக்கைகளைப் பார்த்தால் SCSS வட்டி விகிதம் FD-களை விட மிக அதிகம் என்பதை தெளிவாக பார்க்கலாம். மேலும் அரசு திட்டம் என்பதால் பாதுகாப்பு, நிலையான வருமானம், வரிச்சலுகை ஆகியவை முக்கிய பலன்கள். அதிக வட்டி, அரசு உறுதி எந்த இரண்டு காரணங்களாலும் SCSS, FD-ஐ விட சிறந்த முதலீட்டு வாய்ப்பு. நிலையான மாதாந்திர/காலாண்டு வருமானம் தேடும் மூத்த குடிமக்களுக்கு இது ஒரு நம்பகமான மற்றும் பயனுள்ள விருப்பமாக கருதப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

