Whatsapp | ஜஸ்ட் 4 கிளிக்! - வாட்ஸ்ஆப்பில் வரும் உங்கள் ஆதார் & பான் கார்டு!
ஆதார் மற்றும் பான் கார்டுகளை அந்தந்த தளங்களில் சென்று டவுன்லோடு செய்து வரும் உங்களுக்கு, உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே டவுன்லோடு செய்துகொள்ள முடியும் என்பது தெரியுமா? இதோ இந்த ஈஸி ஸ்டெப்களை ஃபாலோ பண்ணுங்கள் உங்க ஆதார் & பான் கார்டு உங்க வாட்ஸ்ஆப் எண்ணுகே வந்துரும்.
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்னும் காலம் போய், ஆதார் இல்லாத மனிதன் அரை மனிதன் என்னும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதோடு இந்த பான் கார்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த இரு கார்டுகளும் இல்லாவிட்டால் நாட்டில் பெரும்பானா சேவைகளை பெற இயலாத நிலையே உள்ளது. வங்கிக்கணக்கு தொடங், அரசு சேவைகளை பெற, மத்திய மாநில அரசின் நலத்திட்ட உவிகளை பெற, ITR தாக்கல் செய்ய என பலசேவைகளுக்கும் இந்த இரு கார்டுகள் இன்றியமையாததாக உள்ளது.
எனவே தேவைப்படும் எல்லா இடங்களுக்கு எல்லாம் கையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை கொண்டு செல்ல முடியாது. அதற்காகத்தான் இவற்றை அந்தந்த இணையதளங்களில் ஆன்லைனில் டவுன்லோட் செய்யும் சேவையை அரசு வழங்குகி வருகிறது. இனி இவைகளை உங்கள் நேரடி வாட்ஸ்ஆப்பிலேயே டவுன்லோடு செய்யலாம் எப்படி தெரியுமா?
CIBIL விதிகளில் மாற்றம்: கடன் வாங்கப் போகிறீர்களா? - இது அவசியம்
வாட்ஸ் ஆப்பில் அதார் & பான் கார்டு
முதலில் "My Gov" வாட்ஸ்ஆப் உதவி அழைப்பு எண்ணை உங்களது மொபைலில் சேமித்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் போனின் டயலர் பக்கத்திற்கு சென்று "9013151515" என்ற நம்பரை "My Gov" அல்லது "DigiLocker" என்ற பெயரில் சேமித்துக்கொள்ளவும்.
பின்ன், உங்கள் வாட்ஸ் ஆப்பில் இந்த நம்பரை எளிதாக கண்டுபிடித்து "Hi" என்று மெசேஜ் அனுப்பவும்.
நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடன் 'நமஸ்தே' என்று தொடங்கக்கூடிய ஆட்டோமேட்டிக் மெசேஜ் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
அதில், "Cowin services" "DigiLocker services'' என 2 சர்வீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் "DigiLocker services" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், உங்களிடம் DigiLocker அகவுண்ட் இருக்கிறதா? என்று கேட்கப்படும். அதற்கு "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதிலை தேரிவு செய்யுவும்.
அதைத்தொடர்ந்து, உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதனுடன் உங்கள் 12 இலக்க ஆதார் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் டிஜிலாக்கரில் சேமித்த ஆவணங்களை இப்போது உங்கள் வாட்ஸ்ஆப்பில் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டிஜிலாக்கர் என்பது அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் சாட்பாட் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சம்கொள்ள தேவையில்லை.
5 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பிஎஃப் பணத்தை எடுக்க முடியுமா? இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!