MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Business
  • ரயிலில் எப்பவும் பாத்ரூம் ஓரத்து 72‍வது சீட் கிடைக்குதா? பிடிச்ச சீட் கிடைக்க இந்த 1 ட்ரிக் போதும்!

ரயிலில் எப்பவும் பாத்ரூம் ஓரத்து 72‍வது சீட் கிடைக்குதா? பிடிச்ச சீட் கிடைக்க இந்த 1 ட்ரிக் போதும்!

Indian Railways: ரயிலில் உங்களுக்கு பாத்ரூம் ஓர சீட் அடிக்கடி கிடைத்து இருக்கும். எதனால் இப்படி கிடைக்கிறது? நடுப்பகுதியில் பெர்த் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jun 25 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரயிலில் எப்பவும் பாத்ரூம் ஓரத்து 72 வது சீட் கிடைக்குதுதா?
Image Credit : AI

ரயிலில் எப்பவும் பாத்ரூம் ஓரத்து 72-வது சீட் கிடைக்குதுதா?

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. அப்படியே சீட் கிடைத்தாலும் நாம் விரும்பாத இடத்தில் சீட் கிடைத்து தூக்கத்தை தொலைத்து விடுகிறது. ரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக தனியாக பயணம் செய்யும் ஆண்களுக்கு ஒரு பொதுவான குமுறல், "நான் எப்போது அப்பர் பெர்த் (Upper Berth) கேட்டாலும், எப்போதுமே கதவு ஓரம் அல்லது பாத்ரூம் ஓரம் இருக்கும் 72-வது சீட்டை (Side Upper) சாப்ட்வேர் தூக்கிக் கொடுத்துவிடுகிறது" என்பதுதான்.

பாத்ரூம் ஓரத்தில் சீட்கள் கிடைத்தால் அங்கு எப்போதும் லைட் எரிந்து கொண்டிருப்பதால் சிலருக்கு தூங்குவதற்கு இடையூறு இருக்கும். மேலும் பாத்ரூமில் இருந்து வாடை வந்தாலும் தூங்குவதற்கு பெரும் சிரமம் உண்டாகும். ரயிலில் மொத்தம் 72 சீட்டுகள் இருக்கும் நிலையில், நமக்கு மட்டும் ஏன் எப்போதுமே இந்த ஓரத்து சீட்டுகள் கிடைக்கின்றன? இதற்கு பின்னால் இருக்கும் ஐஆர்சிடிசி (IRCTC) சாப்ட்வேரின் ரகசிய கணக்கு என்ன? இந்த தொல்லையிலிருந்து தப்பித்து நடுப்பகுதியில் நல்ல சீட்டை எப்படி வாங்குவது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரயிலின் சமநிலை கணக்கு (Mathematical Balancing)
Image Credit : social media

ரயிலின் சமநிலை கணக்கு (Mathematical Balancing)

IRCTC-ன் சீட் ஒதுக்கீட்டு சாப்ட்வேர் என்பது மனிதர்களைப் போல யோசித்து சீட்டுகளை ஒதுக்குவதில்லை. அது ரயிலின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட "சமநிலை விதி" (Weight Balancing Rule) படி இயங்குகிறது.

ஒரு ரயில் கோச் அதிவேகமாகச் செல்லும் போதும், வளைவுகளில் திரும்பும் போதும் அதன் எடை (Weight) சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கோச் தடம் புரள வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, சாப்ட்வேர் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது, முதலில் கோச்சின் நடுப்பகுதியில் உள்ள சீட்டுகளைத்தான் (உதாரணமாக 30 முதல் 50 வரையிலான எண்கள்) பயணிகளுக்கு ஒதுக்கும். நடுப்பகுதி எடைகள் நிரம்பிய பிறகே, கோச்சின் இரு ஓரங்களிலும் உள்ள சீட்டுகளை நிரப்பத் தொடங்கும்.

Related Articles

Related image1
ரயிலில் சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்களில் போகலாம்! மத்திய அரசின் செம அப்டேட்!
Related image2
Vande Bharat : இது ரயிலா இல்ல பைவ் ஸ்டார் ஹோட்டலா? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இம்புட்டு வசதிகளா?
34
நமக்கு ஏன் 72-வது சீட் கிடைக்கிறது?
Image Credit : Getty

நமக்கு ஏன் 72-வது சீட் கிடைக்கிறது?

நாம் பொதுவாக ரயில் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது, பல நாட்களுக்கு முன்பே நடுப்பகுதியில் உள்ள சீட்டுகளை சாப்ட்வேர் மற்றவர்களுக்கு ஒதுக்கி முடித்திருக்கும். நாம் கடைசி நேரத்திலோ அல்லது வெயிட்டிங் லிஸ்ட் கிளியர் ஆகியோ டிக்கெட் பெறும் போது, எஞ்சியிருப்பது கோச்சின் இரு முனைகளில் உள்ள சீட்டுகள் மட்டும்தான்.

குறிப்பாக, அப்பர் பெர்த் (Upper Berth) ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கும் போது, கடைசியாக நிரம்பும் 72-வது சீட் (Side Upper - கதவு மற்றும் பாத்ரூம் ஓரம்) மட்டுமே காலியாக இருக்கும். இதனால் தான் கம்ப்யூட்டர் தானாகவே அந்த சீட்டை நமக்கு ஒதுக்கிவிடுகிறது. இதனால் இரவு நேரத்தில் கதவு திறக்கும் சத்தம், பாத்ரூம் செல்பவர்களின் நடமாட்டம் மற்றும் வெளிச்சத் தொந்தரவால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

44
பாத்ரூம் ஓரம் சீட் விழாமல் இருக்க 'சூப்பர் ட்ரிக்'
Image Credit : Google

பாத்ரூம் ஓரம் சீட் விழாமல் இருக்க 'சூப்பர் ட்ரிக்'

கதவு ஓரம் அல்லது 72-வது சீட் விழுவதைத் தவிர்க்க பயணிகள் ஒரு எளிய வழியைப் பின்பற்றலாம்.

சார்ட் தயாரித்த பின் செக் செய்யுங்கள் (Chart Vacancy): ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னால் முதல் சார்ட் தயாரிக்கப்படும். அப்போது யாராவது நடுப்பகுதி சீட்டை புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் கேன்சல் செய்திருந்தால், அந்த விஐபி சீட்டுகள் காலியாகும். இதை IRCTC ஆப்பின் 'Chart Vacancy' பிரிவில் பார்க்கலாம்.

பாக்ஸை கிளிக் செய்யாமல் கோச் நம்பர் கொடுங்கள்: IRCTC ஆப்பில் புக் செய்யும் போது, 'Book only if confirm berth are allocated' என்ற பாக்ஸை கிளிக் செய்யாமல், 'Preferred Coach' என்ற இடத்தில் குறிப்பிட்ட கோச் எண்ணையும் (உதாரணமாக S5), Berth Preference-ல் 'Upper' என்றும் கொடுத்து புக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது, அந்த குறிப்பிட்ட கோச்சின் நடுப்பகுதியில் (உதாரணமாக 43-வது சீட்) ஏதேனும் கேன்சல் செய்யப்பட்ட சீட்டுகள் இருந்தால், சாப்ட்வேர் உடனடியாக அந்த நல்ல சீட்டை உங்களுக்கு ஒதுக்கிவிடும். இனி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இந்த எளிய கணக்கை மனதில் வைத்து புக் செய்தால், பாத்ரூம் ஓரத்து சீட்களில் இருந்து தப்பித்து, நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி விதிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
10 Rupee Note Bundle: மொய் வைக்க 10 ரூபாய் நோட்டுகள் தேவையா? பேங்க்ல இப்படி ஈஸியா வாங்கலாம்!
Recommended image2
Money Management: பாக்கெட்டை காலி பண்ற 'சைலன்ட் கில்லர்' செலவுகள்... பணம் பெருக சாணக்கியர் தரும் 5 பொன்னான ரகசியங்கள்!
Recommended image3
House Construction : 1000 சதுர அடியில் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!
Related Stories
Recommended image1
ரயிலில் சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்களில் போகலாம்! மத்திய அரசின் செம அப்டேட்!
Recommended image2
Vande Bharat : இது ரயிலா இல்ல பைவ் ஸ்டார் ஹோட்டலா? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இம்புட்டு வசதிகளா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved