MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நம்ம தங்கம் நம்ம வீட்டில்! இந்தியாவின் பெரிய மூவ்.. வியப்பில் உலக நாடுகள்

நம்ம தங்கம் நம்ம வீட்டில்! இந்தியாவின் பெரிய மூவ்.. வியப்பில் உலக நாடுகள்

உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால், இந்தியா தனது தங்கச் சேமிப்பை வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இது எதிர்கால நிதி நெருக்கடிகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 02 2026, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியாவின் பெரிய முடிவு
Image Credit : Gemini AI

இந்தியாவின் பெரிய முடிவு

உலகளாவிய பொருளாதார சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில், இந்தியா தனது தங்கச் சேமிப்பை பாதுகாப்பான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளது. லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான டன் தங்கத்தை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) படிப்படியாக திரும்பப் பெறுகிறது. இது ஒரு சாதாரண நிதி நடவடிக்கை அல்ல. எதிர்கால அசாதாரண சூழ்நிலைகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆர்பிஐ வெளியிட்ட சமீபத்திய அரையாண்டு அறிக்கையின் படி (அக்டோபர் 2025 - மார்ச் 2026), இந்தியாவிடம் மொத்தமாக 880.52 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. இதில் சுமார் 77% அல்லது 680 டன் தங்கம் தற்போது இந்தியாவிலேயே பாதுகாக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வெளிநாட்டிலிருந்த தங்கம் திரும்பியது
Image Credit : Getty

வெளிநாட்டிலிருந்த தங்கம் திரும்பியது

மேலும் 197.67 டன் தங்கம் Bank of England மற்றும் BIS அமைப்புகளில் உள்ளது; 2.8 டன் டெபாசிட்களாக உள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வெறும் 6 மாதங்களில் மட்டும் 104.23 டன் தங்கம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2023 மார்ச் வரை நாட்டுக்குள் இருந்த தங்கம் 37% மட்டுமே என்பதால், இந்த மாற்றத்தின் வேகம் கவனிக்கத்தக்கது. இந்த மாற்றத்துக்கு பின்னால் உலக அரசியல் நிகழ்வுகள் முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக ரஷ்யா–உக்ரைன் போர் மற்றும் அதன் பின் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வெளிநாட்டு நிதிகள் முடக்கப்பட்ட சம்பவங்கள், பல நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்தன. வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படலாம் என்ற உணர்வு அதிகரித்துள்ளது. அதனால், “தங்கம் நம் கையில் இருந்தால்தான் அது உண்மையிலேயே நம்மது” என்ற அணுகுமுறையை பல நாடுகள் எடுத்துள்ளன. இந்தியாவும் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.

33
இந்தியா தங்கத்தை பாதுகாப்பாக மாற்றுகிறது
Image Credit : Gemini AI

இந்தியா தங்கத்தை பாதுகாப்பாக மாற்றுகிறது

வெளிநாட்டு நாணய கையிருப்பு சற்று குறைந்திருந்தாலும், அதில் தங்கத்தின் பங்கு 13.9% இலிருந்து 16.7% ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு “ஸ்ட்ராடஜிக் இன்சூரன்ஸ்” போன்று செயல்படுகிறது. அவசர காலங்களில் உடனடி லிக்விடிட்டி கிடைக்க, தங்கம் நாட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் பரவியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளும் தங்க சேமிப்பை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. உலகளாவிய நிதி அமைப்புகள் இந்த நேரத்தில் மாறிக்கொண்டிருக்கும், தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நாடுகளின் முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
தங்க விலை
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்பானிகளின் ஜியோ IPO! வெறும் 100 நிமிடங்களில் மொத்தமும் காலி.! முதலீட்டாளர்கள் ஏன் ஆர்வம் காட்டினார்கள் தெரியுமா?
Recommended image2
8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்
Recommended image3
Uzhavar Santhai Vegetable Price: கீரை ரூ.10, தேங்காய் ரூ.25.! மூட்டை மூட்டையாய் காய்கறிகள் Sale.! உழவர் சந்தையில் குயியும் இல்லத்தரசிகள்.!
Related Stories
Recommended image1
தங்கம் வாங்குவதில் புது டிரெண்ட்: நகையை விட முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்! நிபுணர்கள் சொல்லும் காரணம்!
Recommended image2
Gold Rate Today: தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.! நகைப்பிரியர்களுக்கு அடித்தது லக்கி ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved