MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today: தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.! நகைப்பிரியர்களுக்கு அடித்தது லக்கி ஜாக்பாட்!

Gold Rate Today: தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.! நகைப்பிரியர்களுக்கு அடித்தது லக்கி ஜாக்பாட்!

சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 சரிந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 29 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
Image Credit : Asianet News

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது, நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், தங்கம் விலை மீண்டும் 'அதளபாதாளத்தை' நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.

24
ஒரே நாளில் சரிந்த விலை: இன்றைய நிலவரம்
Image Credit : Asianet News

ஒரே நாளில் சரிந்த விலை: இன்றைய நிலவரம்

இன்று (ஏப்ரல் 29, 2026) காலை நிலவரப்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களில் இல்லாத அளவிற்கு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம்: கிராமுக்கு ரூ.150 குறைந்து, ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரன் விலை: சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,200 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்குக் கிடைத்த ஒரு 'லக்கி ஜாக்பாட்' என்றே கூறலாம்.

Related Articles

Related image1
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
Related image2
Business Idea: மாதம் ரூ.50,000 ஈசியா சம்பாதிக்கலாம்.! லாபத்தை அள்ளித்தரும் சூப்பர் பிஸ்னஸ்.!
34
18 காரட் மற்றும் வெள்ளி நிலவரம்
Image Credit : Asianet News

18 காரட் மற்றும் வெள்ளி நிலவரம்

முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.11,635-க்கும், சவரனுக்கு ரூ.1,000 சரிந்து ரூ.93,080-க்கும் விற்பனையாகிறது.

அதேநேரம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44
விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
Image Credit : Asianet News

விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

சர்வதேச அளவில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை விடுத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் எதிரொலியே இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

நிபுணர்களின் ஆலோசனை: தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயர வாய்ப்புள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த விலைக் குறைவைப் பயன்படுத்தி இப்போதே முன்பதிவு செய்தோ அல்லது நேரிலோ தங்கம் வாங்குவது லாபகரமாக இருக்கும்.

தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்து வருவது, இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அலைமோதும் கூட்டத்தால் நகைக்கடைகள் இன்று களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க இறக்குமதி விதிகள்
தங்க நகை
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க நகை
தங்க விலை
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026 | LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
Recommended image2
இனி இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் செல்லாது.. UIDAI அதிரடி உத்தரவு.. கையில் இதை வச்சுக்கோங்க!
Recommended image3
இனி பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலை இல்லை.! அரபு நாடுகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா.! பெட்ரோலுக்கு புது மாற்று வந்தாச்சு.!
Related Stories
Recommended image1
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
Business Idea: மாதம் ரூ.50,000 ஈசியா சம்பாதிக்கலாம்.! லாபத்தை அள்ளித்தரும் சூப்பர் பிஸ்னஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved