- Home
- Business
- Train Food: ரயில் சாப்பாடு 'சப்'பென்று இருக்கா? சமையல் காரணமல்ல; பின்னணியில் சயின்ஸ் இருக்கு!
Train Food: ரயில் சாப்பாடு 'சப்'பென்று இருக்கா? சமையல் காரணமல்ல; பின்னணியில் சயின்ஸ் இருக்கு!
Train Food: ரயிலில் போகும்போது நாம் சாப்பிடும் உணவின் டேஸ்ட் குறைந்ததுபோல் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? இதற்கு சமையல் மட்டும் காரணம் அல்ல; அறிவியல் காரணமும் உள்ளது. அது குறித்து பார்ப்போம்.

ரயிலில் உணவு ருசியாக இல்லாததற்கான காரணம்
ரயிலில் பயணம் செய்வது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ரயிலில், ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவினை ருசித்தடியே வேடிக்கை பார்த்தபடி பயணிப்பது தனி சுகம் தான். ஆனால், எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து சமைத்தாலும், ரயிலில் சாப்பிடும்போது வீட்டு சாப்பாட்டின் திருப்தி கிடைப்பதே இல்லை. இதற்கு சமையல் கலைஞர்களை மட்டும் குறை கூற முடியாது; இதன் பின்னணியில் வியப்பூட்டும் சில அறிவியல் காரணங்களும், தயாரிப்பு முறைகளும் ஒளிந்துள்ளன.
இதையும் படிங்க: Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
மூளையைக் குழப்பும் ரயில் சத்தம்
ரயில் பயணிக்கும்போது தொடர்ச்சியாக கேட்கும் 'தடதட' சத்தம் நம்மையறியாமலேயே நமது மூளையை பாதிக்கிரது. அதிக சத்தமுள்ள சூழலில் உணவருந்தும்போது, நாவில் உள்ள சுவை மொட்டுகளால் இனிப்பு மற்றும் உப்புச் சுரயிலில்வையை 15% வரை சரியாகக் கண்டறிய முடியாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தான் நல்ல உணவும் ரயிலில் சப்பென்று தெரிகிறது.
ஏசி பெட்டிகளின் வறண்ட காற்று
ஒரு உணவின் சுவையை நாம் முழுமையாக அனுபவிக்க 80% அதன் வாசனை தான் உதவுகிறது. ரயிலின் ஏசி (AC) பெட்டிகளில் உள்ள காற்று மிகவும் வறண்டு (Dry air) காணப்படும். இந்த ஈரப்பதமற்ற சூழலால் நமது மூக்கின் உட்பகுதி வறண்டு, உணவின் நறுமணத்தை நுகரும் திறனை தற்காலிகமாகக் குறைத்துவிடுகிறது. வாசனை தெரியாததால் சுவையும் தெரிவதில்லை.
இதையும் படிங்க:அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!
மொத்தமாகத் தயாரிக்கப்படும் முறைகள்
ரயில்வே கேட்டரிங்குகளில் (Base Kitchens) தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்காக ஒரே நேரத்தில் டன் கணக்கில் உணவு சமைக்கப்படுகிறது. வீடுகளில் நாம் காட்டும் தனிப்பட்ட கவனமும், பக்குவமும் இவ்வளவு பெரிய அளவில் மொத்தமாகச் சமைக்கும்போது சாத்தியப்படுவதில்லை.
மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதல் (Re-heating)
உணவுகள் அனைத்தும் பல மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்டு, பயணிகளுக்கு வழங்கும் முன்புதான் மீண்டும் சூடுபடுத்தப்படுகின்றன. இப்படித் தொடர்ந்து சூடுபடுத்துவதால், உணவில் உள்ள இயற்கையான நீர்ச்சத்து வற்றிப்போய், அதன் அசல் சுவை முற்றிலும் மாறிவிடுகிறது.
வளிமண்டல அழுத்த மாறுபாடுகள்
ரயில்கள் அதிவேகமாகச் செல்லும்காலங்களிலும், உயரமான மலைப்பாதைகளைக் கடக்கும்போதும் வளிமண்டல அழுத்தத்தில் (Atmospheric pressure) மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது நமது உடலின் செரிமான மண்டலத்தையும், நாக்கின் சுவை உணர்திறனையும் தற்காலிகமாக மழுங்கடிக்கச் செய்கிறது.
அதீத மசாலா மற்றும் உப்பின் பயன்பாடு
ரயிலில் உணவு சப்பென்று இருக்கக்கூடாது என்பதற்காக, சமைக்கும்போதே வழக்கத்தைவிடக் கூடுதலாக உப்பு, காரம் மற்றும் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது உணவின் உண்மையான சுவையை மறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது.
பேக்கிங் கொள்கலன்களின் தாக்கம்
சமைத்த உணவை நீண்ட நேரம் பிளாஸ்டிக் அல்லது அலுமினியக் கொள்கலன்களில் அடைத்து வைப்பதால், மசாலாவின் வெப்பமும் பேக்கிங் பொருளும் வினையாற்றி ஒருவித செயற்கையான சுவையை உருவாக்கிவிடுகின்றன. இதனால் பிரஷ்ஷான உணவின் சுவை நமக்குக் கிடைப்பதில்லை.
ரயில் பயணத்தின்போது சுவையை மீட்டெடுக்க எளிய வழிகள்
அடுத்த முறை நீங்கள் ரயிலில் பயணிக்கும்போது உணவின் சுவை குறையாமல் இருக்க சில எளிய வழிகள்:
- உணவோடு சேர்த்து நறுக்கிய பழத் துண்டுகளை எடுத்துச் செல்லலாம்.
- உணவில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடலாம்.
- வீட்டிலிருந்தே காரசாரமான சட்னி அல்லது ஊறுகாய் கொண்டு செல்லலாம்.
இவை உங்களது சுவை மொட்டுகளைத் தூண்டி, பயணத்திலும் உணவை ரசித்துச் சாப்பிட வழிவகுக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

