சொந்த வீடு vs வாடகை வீடு: எது சிறந்தது?
இந்தியாவில் வீடு வாங்குவது குறித்த மனநிலை மாறிவருகிறது. இளம் தலைமுறையினர் சொந்த வீடு வாங்குவதா அல்லது வாடகைக்கு இருப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். உயர் வீட்டு விலைகள், கடன்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த முடிவை கடினமாக்குகின்றன.

சொந்த வீடு என்ற பெருங்கனவு
இந்தியர்கள் மத்தியில் வீடு வாங்குவது ஒருகாலத்தில் பெரிய சாதனையாகவே கருதப்பட்டது. வீடு வாங்குவது என்பது பெருமையின் அடையாளமாகவும் இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விரைவில் வீடு வாங்க தூண்டினர். பெரிய கடனை எடுத்தாலும் பரவாயில்லை என்று நினைத்தனர். ஆனால் இப்போது இந்த மனநிலை மாறி வருகிறது, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே.
வாடகை வீடா? சொந்த வீடா?
தற்போது சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே இருக்கலாமா என்ற விவாதம் பல இளம் தம்பதிகளிடமும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பிரதான நகரங்களில் எல்லாம் அனைத்து வசதிகளும் நிறைந்த பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1 கோடிக்கு மேல் செலுத்த வேண்டி இருக்கிறது.
20 ஆண்டுகள் கடன்
வீட்டிற்கு ஆசைப்பட்டு ஏதேனும் ஒரு வங்கியில் வீட்டுக் கடனை வாங்கி விட்டால் அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு இந்த கடனை செலுத்துவதற்காகவே வேலைக்கு சென்றாக வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் சொந்த வீடு வாங்குவது சிறந்ததா? அல்லது வாடகை வீட்டிலேயே தங்கி விடலாமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
யோசித்து முடிவெடுக்கும் இளைஞர்கள்
ஆனால் தற்போது கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர்கள் யாரும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்து வீடு வாங்குதில்லை என்கிறது சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவுகள். உயர்ந்த வீட்டு விலை, பணநிலை சிக்கல்கள், தொழில்மாற்ற விருப்பங்கள், கல்விக் கடன்கள், உயர்ந்த வட்டி விகிதங்கள் என எல்லாம் சேர்ந்து வீடு வாங்குவதை கடினமாக்கியுள்ளதாகவும் ஆனாலும் வீடு வாங்கும் கனவு முற்றிலும் மறைந்துவிடவில்லை எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
முடிவெடுப்பது அவசியம்
சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் தாங்கள் அந்த ஊரில் தான் செட்டிலாக போகிறோமா அல்லது அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு இந்த ஊரிலே தான் தொடர்ந்து தங்கி இருக்க போகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
வாடகை வீடு - இதுதான் நன்மைகள்
வாடகை வீட்டில் வாழ்வது என்பது குறைந்த முதலீடு, பராமரிப்பு சுமை இல்லாமை, வேலை மாற எளிதாக உள்ள வாய்ப்பு போன்ற பல நன்மைகளை அளிக்கிறது. இது சிறந்த நிதிச் சுதந்திரத்தையும் உடனடி திருப்பித் தரும் சாத்தியங்களையும் கொடுக்கும். ஆனால் வீடு வாங்குதல் மட்டுமே நிலைத்த சொத்து மற்றும் மதிப்பீட்டில் வளர்ச்சி அளிக்கக்கூடும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலீடு செய்வது அவசியம்
வாடகை வீடு என்றால் நம்முடைய வாழ்க்கை தரம் உயர உயர அதற்கு ஏற்ற வீட்டிற்கு நாம் மாறலாம. நம்முடைய வேலைக்கு ஏற்ப அல்லது பிள்ளைகளின் பள்ளிக்கு ஏற்ப அருகிலேயே இருக்கும் வீட்டிற்கு நாம் வாடகைக்கு சென்று விடலாம். ஆனால் நம்முடைய பெயரில் எந்த ஒரு சொத்தும் உருவாகி இருக்காது. ஆனால் அந்த பணத்தை முறையாக திட்டமிட்டு வேறு முதலீடு கருவிகளில் முதலீடு செய்து ஒரு கணிசமான தொகையை சேர்த்து அதை வைத்து வீடு வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சொந்த வீடு எனும் சொர்க்கம்
இல்லம் வாங்குவது உணர்ச்சிப் பாதுகாப்பையும், வரி நன்மைகளையும், கடன் செலுத்தும்போது உண்டாகும் சேமிப்பையும் தரும். இது நீண்ட காலத்தில் செல்வாக்கு மற்றும் சொத்து மதிப்பீட்டில் ஆதாயம் தரும் என்கின்றனர் ரியல்எஸ்டேர் நிபுணர்கள்.
சுலபமாக கிடைக்கும் வீட்டு கடன்கள்
கொரோனா பரவலுக்கு பிறகு ஹைபிரிட் வேலை முறை அதிகரித்தது. மக்கள் நல்ல வசதிகள் உள்ள நகர்ப்புறங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், ஒருங்கிணைந்த டவுன்ஷிப்கள் (integrated townships) மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது.மாற்றாக, வட்டி விகிதம் உயர்ந்ததால் வீட்டு கடன்களுக்கான EMI அதிகமாகியது, இதனால் வாடகை வீடுகள் மலிவாகத் தோன்றின. ஆனால் 2025-இல் RBI Repo Rate 6.25%-இல் இருந்து 6.0%-ஆக குறைத்ததனால், வீட்டு கடன்கள் மீண்டும் சுலபமாகி விட்டன.
இது புது கால்குலேஷன்
மேட்ட்ரோ நகரங்களில் வாடகை அதிகரித்துள்ளதால், வீட்டுக்கு கொடுக்கும் வாடகையும் புது வீட்டுக்கு கொடுக்கும் EMIயும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதால் வீடு வாங்குவதை நிதி ரீதியாக புத்திசாலித்தனமான தீர்வாக மாற்றுகிறது என்று சொல்வோறும் உண்டு.
சொந்த வீடு முதலீடு - எந்த வயது ஏற்றது?
பணம் முதலீடு செய்து வீடு வாங்கும் திட்டம் இருந்தால் அதனை 30 வயதில் இருப்பவர்கள் மேற்கொள்ளலாம். 40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு இது சிறந்த முடிவை தராது. முதலீடு வளர்வதற்கு ஆண்டுகள் தேவை என்பதால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
28 வயதில் ₹1 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் — என்ன செய்ய வேண்டும்?
முதலில் அவசர நிதி (emergency fund), காப்பீடு, ஓய்வுக்கு சேமிப்பு — இவற்றை அமைப்பது முக்கியம். அதன் பிறகே முதலீட்டு திட்டங்களை துவக்கலாம்.
வாங்குபவர்கள் செய்யும் தவறுகள்
வீடு வாங்கும் போது வரி, பதிவு கட்டணம், பராமரிப்பு செலவுகளை தவிர்த்து விடுகிறார்கள். கிரெடிட் ஸ்கோர் கவனிக்கவில்லை எனவும், அதிக EMI எடுத்துவிட்டு மற்ற செலவுகளுக்கு இடமில்லை என்றும் சொல்ல வேண்டாம். சந்தையை ஆராயாமல் முடிவெடுப்பது சரியாக இருக்காது, சரியான திட்டமிடல் மற்றும் பக்குவமான முடிவே இங்கு முக்கியம்
வாடகை வருமானம்
முதன்மையாக, உங்கள் வேலை நிலைத்திருக்க வேண்டும், சேமிப்பு இருக்க வேண்டும். உங்கள் மாத வருமானத்தின் 30–40% க்குள் EMI இருந்தால் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். வீடு முதலீட்டை விரைவாக செய்தால், அதிக மதிப்பு உயர்வு மற்றும் வாடகை வருமானம் கிடைக்கும்.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
அடுத்த 5 ஆண்டுகளில் வாடகை சந்தை அதிகமாக ஒழுங்கமைக்கப்படும். Co-living, tech-enabled services, shared amenities ஆகியவை வாடகையாளர்களை ஈர்க்கும். ஆனால் வாடகை மீண்டும் அதிகரிக்கப் போகிறது. நகரங்களில் வாடகை விகிதம் வருடத்திற்கு 7%-10% உயரும். இது பணவீக்கத்தைவிட வேகமாகவே இருக்கும். வாடகை வீடு செலவு — EMI அளவிற்கு வரும் போது, வீடு வாங்கும் முடிவு புத்திசாலி முடிவாக மாறும்.
நிம்மதி தரும் முதலீடு
வீடு வாங்குவது உங்கள் வாழ்க்கை நிலை, எதிர்கால இலக்குகள், பணநிலை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இப்போது வாடகை வசதியாக இருக்கலாம். ஆனால் சொந்த வீடு என்பது நீண்டநாள் மதிப்புடனும் நிம்மதியுடனும் கூடியதுதான்.