Car Smart key: கார் சாவி தொலைந்தால் என்ன செய்வது.? இன்ஷூரன்ஸ் இருக்கிறதா.?!
Key Fob எனப்படும் ஸ்மார்ட் கார் சாவி தொலைந்தால், உடனடியாக FIR பதிவு செய்து, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் மூலம் புதிய சாவியை பெறுவது பாதுகாப்பானது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
ஸ்மார்ட் கீ எனும் ரிமோர்ட் கன்ரோல்
இன்றைய நவீன தொழில்நுட்ப கார்களில் "Key Fob" எனப்படும் ஸ்மார்ட் சாவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாதாரண உலோக சாவிகளை மிஞ்சி, இவை லாக், அன்லாக், ஸ்டார்ட் போன்ற செயல்களை ஸ்மார்ட் முறையில் செய்கின்றன. இந்த சாவிகள் கம்ப்யூட்டர் கோட்களுடன் கார் லாக் சிஸ்டத்துடன் ஒத்திசைந்திருக்கும். அதனால சாவிய மட்டும் தொலைச்சுட்டோம்னா சிரமம்தான்.
Key Fob தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியது
FIR பதிவு: முதலில் உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்ய வேண்டும். உங்கள் கார் பாதுகாப்பிற்கு இது முக்கியம்.
இன்ஷூரன்ஸ் நிறுவனம் தொடர்பு: உங்கள் கார் காப்பீடு நிறுவத்திற்கு இந்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும். FIR நகலை உடன் சமர்ப்பிக்கவும்.
சர்வீஸ் சென்டர் வழியே அணுகுதல்: அதிக நம்பிக்கையுள்ள வழி இது தான். உங்கள் கார் தயாரிப்பாளர் அனுமதித்த சர்வீஸ் சென்டர் மூலமாகவே Key Fob ஐ மாற்றுவது பாதுகாப்பானது.
சாவிக்கு இன்ஷூரன்ஸ் இருக்கிறதா?
ஆம், கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது “Key Protect Add-on” என்ற சிறப்பு அம்சம் சில காம்பிரிஹென்ஸிவ் பாலிசிகளில் கிடைக்கிறது. இதை டிக் செய்வதன் மூலம் Key Fob தொலைந்தால் அல்லது பழுதானால், அதனை மாற்றும் செலவுக்கு இன்ஷூரன்ஸ் நிபந்தனைகளுக்குள் வரலாம்.
அதிக செலவுடன் கூடிய சாவி!
ஒரு Key Fob-ஐ மாற்ற, அதன் தொடர்பான ப்ரோகிராம்மிங், லாக் செட் மாற்றம் போன்றவை அனைத்தும் சேர்ந்து சில ஆயிரம் ரூபாய்கள் வரை செலவாகலாம். சில கார்களில் ₹10,000 முதல் ₹25,000 வரை கூட செலவாகும். அதற்கான பாதுகாப்பே “Key Protect Add-on.”
பொது தவறுகள்
சிலர் தெரிந்த மெக்கானிக்குகள் மூலம் டூப்ளிகேட் Key Fob செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். இது ஆபத்தானது. சரியான சிஃப்டு இல்லாமல் கார் திருடு போக வாய்ப்பு உண்டு. ஒரு சாவி இருந்தால் போதும் என நினைத்து, நீண்ட நாட்கள் ஸ்பேர் கீயை மட்டுமே பயன்படுத்துவது தவறு. புது சாவிக்காக 30 நாட்களில் க்ளெய்ம் செய்யாவிட்டால், இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு செயலிழக்கும். சிலர் "No Claim Bonus" (NCB) க்கு பாதிப்பு ஏற்படுமா என பயப்படுகிறார்கள். ஆனால், பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் சாவிக்கான க்ளெய்ம்கள் NCBஐ பாதிக்காது.
சாவிக்கும் உண்டு காப்பீடு
புதிய கார் வாங்கும் போது, Key Protect Add-on உடன் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இது வழக்கமாக எல்லா கார்கள், குறிப்பாக ஸ்மார்ட் கீ கொண்ட கார்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் கார் மதிப்பும் பாதுகாப்பும் நிலைத்திருக்கும். மேலும், எதிர்காலத்தில் விற்பனை செய்யும் போது இரண்டு சாவிகள் இருந்தால்தான் அதிக மதிப்புடன் விற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.Key Fob ப்ராப்ளம்களுக்கு அனுமதிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் மூலமாகவே வழிகாட்டல் பெறுங்கள்.மெக்கானிக்க் டூப்ளிகேட் செயல்களில் திருட்டு அபாயம் உள்ளது. Key Fob என்பது கம்ப்யூட்டர் பாதுகாப்பு சிஸ்டத்துடன் இணைந்தது என்பதே இதன் முக்கியத்துவம்!