புதுசா கிளம்பும் ஜம்ப் டெபாசிட் மோசடி! ஈசியா யாரையும் நம்பாதீங்க!
Jump Deposit Scam in UPI transactions: UPI பரிவர்த்தனைகளில் 'ஜம்ப் டெபாசிட்' எனப்படும் புதிய மோசடி அதிகரித்து வருகிறது. மோசடி செய்பவர்கள் சிறிய தொகையை டெபாசிட் செய்து நம்பிக்கையைப் பெற்று பின்னர் பெரிய தொகையை மோசடி செய்கிறார்கள். UPI பின்னைப் பகிர வேண்டாம் மற்றும் சந்தேகத்திற்குரிய கோரிக்கைகளை நிராகரிக்கவும்.
Jump Deposit Scam
யுபிஐ (UPI) இந்தியாவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஆன்லைன் பரிவர்த்தனை முறையாக மாறியுள்ளது. வசதி மற்றும் வேகமான செயலாக்க நேரம் காரணமாக, கோடிக்கணக்கானவர்கள் UPI முறையை விரும்புகிறார்கள்.
What is Jump Deposit Scam?
மொபைல் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிவர்த்தனைகளை செய்ய UPI பயன்படுகிறது. பயனர்களுக்கு வசதியான வடிவமைப்பு மற்றும் உடனடி பரிவர்த்தனைகள் காரணமாக UPI முறை பிரபலமாக்கியுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மோசடிகள் காரணமாக, அதன் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.
UPI transactions
இப்போது 'ஜம்ப் டெபாசிட்' எனப்படும் புதிய மோசடி அதிகமாகி வருகிறது. இந்த புதிய மோசடி எப்படி நடக்கிறது? உங்கள் UPI பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய செய்யவேண்டியது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
UPI Scams
ஜம்ப் டெபாசிட் மோசடியில் மோசடிக்காரர்கள் முதலில் தாங்கள் குறிவைக்கும் பயனர்களின் வங்கிக் கணக்கில் சிறிய தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதன் மூலம் நம்பகத்தன்மையை உருவாக்கி, பயனர்கள் பெரிய பரிவர்த்தனைகளை செய்யத் தூண்டி ஏமாற்றுகிறார்கள்.
UPI payments
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்த மோசடி குறித்த கவலைக்கு பதில் அளித்துள்ளது, UPI தளங்களில் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. UPI பின் மூலம் பயனரின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் UPI பரிவர்த்தனைகள் நடக்காது என்றும் என்.பி.சி.ஐ. உறுதிப்படுத்தியுள்ளது.
NPCI on Jump Deposit Scam
UPI பேமெண்டுகள் பாதுகாப்பாக இருக்க, பயனர்கள் சில முன்னெச்சரிக்கை பழக்கங்களைப் பின்பற்றலாம். உங்கள் UPI பின்னை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். UPI PIN ரகசியமானது. மற்றவர்களுடன் பகிர்வது, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும்.
Jump Deposit Fraud
எந்தவொரு பேமெண்ட் கோரிக்கையையும் எப்போதும் இருமுறை சரிபார்க்கவும். சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், நிராகரிப்பது நல்லது. அதிகாரப்பூர்வ பேமெண்ட் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டும் UPI அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்யவும்.