PF Death Claim | இறந்த நபரின் PF தொகை என்னவாகும்! அதனை பெற நாமினி இதை செய்தே ஆக வேண்டும்!
தொழிலாளர்களின் ஓய்வு காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் PF (provident fund) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை ஒருவர் இறந்துவிட்டால் அவரது PF என்னவாகும். அதனை அவரது உறவினர்கள் அல்லது நாமினி எப்படி பெற வேண்டும் என்பதை இப்பதிவில் காணலாம்.
ஊழியர்கள் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் EPF எனப்படும், வருங்கால வைப்புநிதி திட்டம். ஈபிஎஃப்ஓ (EPFO) என்ற அமைப்பு அதனை நிர்வகித்து வருகிறது. ஊழியரின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியும், அவரது நிறுவனுமும் ஒரு சிறு பகுதியும் ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது.
PF கணக்கு வைத்திருக்கும் தொழிளார்கள் திருமணம் மற்றும் மருத்துவ அவசர காலங்களில் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். ஒருவேளை, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்த பிஎஃப் பணம் என்னவாகும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
நாமினிக்கு போகும் பணம்
PF கணக்கு வைத்திருப்பவர் மரணமடைந்தால் EPFO விதிகளின்படி, கணக்கில் உள்ள முழு தொகையும் பிஎஃப் கணக்குதாரரின் நியமிக்கப்பட்ட நாமினிக்கு பணம் மாற்றப்படும்.
நாமினி, அந்த தொகையை டெத் கிளைம் (Death Claim) தாக்கல் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தபால் அலுவலகங்கள் அல்லது EPFOவின் இணையதளத்தில் கிடைக்கும் டெத் கிளைம் படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
PF கணக்குதாரர் இறந்தவுடன், அவரால் நியமிக்கப்பட்ட நாமினி படிவம் 20-ஐ பெற்று பூர்த்தி செய்து, பிஎஃப் கணக்குதாரர் குறித்த விரிவான விவரங்களை அளித்து சமர்பிக்க வேண்டும். கிளைம் செயல்முறைக்குப் பிறகு, நாமினியின் வங்கிக் கணக்கிற்கு இறந்தவரின் PF தொகை வரவு வைக்கப்படும்.
செப்டம்பர் 14 வரை தான் டைம் இருக்கு... இலவசமாக ஆதார் அப்டேட் செய்யும் வாய்ப்பை மிஸ் பண்ணாதிங்க!
தேவையான ஆவணங்கள்
PF Death claim செய்ய நாமினிக்கு, இறந்தவரின் PF கணக்கு எண், அவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை மற்றும் மொபைல் எண், டெத் கிளைம் கோரிக்கை படிவம், PF கணக்கு வைத்திருந்தவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் PF கணக்கு வைத்திருந்தவரின் வங்கி பாஸ்புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் கண்டிப்பாக கையோடு வைத்திருக்க வேண்டும்.
ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்.. எந்த போஸ்ட் ஆஃபீஸ் திட்டம் அதிக லாபத்தை கொடுக்கும்?
எந்த நாமினியும் சேர்க்கப்படவில்லை என்றால், இறந்தவரின் PF பணம் சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். அவரும், இறப்பு சான்றிதழ், வாரிசுச்சான்றிதழ் உள்ளிட்டவைகளுடன், மேற்சொன்ன அனைத்து ஆவணங்களுடன் பிஎஃப் அலுவலகத்தை நாடி பிஎஃப் பணத்தை பெறலாம்.