MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PAN Card: பான் கார்டில் போட்டோ, கையெழுத்தை மாற்றணுமா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டிலிருந்தே மாற்ற எளிய வழி இதோ!

PAN Card: பான் கார்டில் போட்டோ, கையெழுத்தை மாற்றணுமா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டிலிருந்தே மாற்ற எளிய வழி இதோ!

PAN Card Update: பான் கார்டில் இருக்கும் உங்கள் பழைய போட்டோ அல்லது கையெழுத்தை மாற்ற வேண்டுமா? இதற்காக அலைச்சல் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சுலபமாக மாற்றலாம். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 27 2026, 08:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வீட்டில் இருந்தே பான் கார்டை அப்டேட் செய்யுங்கள்
Image Credit : Asianet News

வீட்டில் இருந்தே பான் கார்டை அப்டேட் செய்யுங்கள்

அரசு ஆவணங்கள் குறிப்பாக பான் கார்டு, ஆதார் கார் நமது போட்டோ சரியாக இருப்பதில்லை. சில சமயம் பழைய போட்டோ, கையெழுத்தினால் அரசு வேலைகளில் சிக்கல் வரும். ஆனால் இதை பற்றி கவலைப்படாதீங்க. உங்கள் பான் கார்டில் போட்டோவையும் கையெழுத்தையும் எப்படி மாற்றுவது என்று விளக்கமாக பாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேவையான ஆவணங்கள்
Image Credit : Asianet News

தேவையான ஆவணங்கள்

ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை. ஒரு புதிய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் வெள்ளைத்தாளில் போடப்பட்ட புதிய கையெழுத்தின் தெளிவான ஸ்கேன் காப்பி. உங்களுடைய ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் (இதற்குத்தான் இறுதிச் சரிபார்ப்புக்கான OTP வரும்).

Related Articles

Related image1
இந்தியாவில் வேலை பார்க்க பெஸ்ட் கம்பெனி எது? ரிலையன்ஸ் எத்தனாவது இடம் தெரியுமா?
Related image2
Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
34
ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள்
Image Credit : Youtube

ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள்

முதலில் Protean (முந்தைய NSDL) அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு விண்ணப்ப வகையின் கீழ் 'Changes or Correction in Existing PAN Data' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் 'Category' பிரிவில் 'Individual' என்பதைத் தேர்வு செய்யவும். உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் (Email ID) மற்றும் தற்போதைய பான் எண் ஆகிய முக்கிய விவரங்களை உள்ளிட்டுச் சமர்ப்பிக்கவும். இப்போது உங்களுக்கான ஒரு டோக்கன் எண் (Token Number) உருவாக்கப்படும்.

உங்களுடைய அடையாளச் சான்றுகளைத் தேர்ந்தெடுத்து, தயாராக வைத்துள்ள புதிய புகைப்படம் மற்றும் கையெழுத்தின் ஸ்கேன் நகல்களை விதிமுறைகளின்படி (குறிப்பிட்ட சைஸ் மற்றும் ஃபார்மட்) அப்லோடு செய்யவும். விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு, இதற்கான ஆன்லைன் கட்டணமான ரூ.107-ஐ (ஆன்லைன் பேங்கிங்/UPI/கார்டு மூலம்) செலுத்தவும். பேமெண்ட் முடிந்ததும், உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் உங்களது விண்ணப்ப செயல்முறை வெற்றிகரமாக முடிவடைந்துவிடும். இறுதியாக இதற்கான ஒப்புதல் ரசீது (Acknowledgement Receipt) உங்களுக்குக் கிடைக்கும்.

44
முக்கிய குறிப்புகள்
Image Credit : Incometax.com

முக்கிய குறிப்புகள்

புகைப்படம் மற்றும் கையெழுத்தை அப்லோடு செய்யும்போது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேபி (KB) அளவைச் சரியாகக் கவனித்து அப்லோடு செய்யவும். விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தை (Application Status) அறிந்து கொள்ள உங்களுடைய சரியான மின்னஞ்சல் ஐடியைக் கொடுப்பது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பான் அட்டை
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Price Hike: சிலிண்டர் விலை ரூ.18 உயரப் போகுதா? சாமானியர்களுக்கு அடுத்த ஷாக்!
Recommended image2
HRA Rules: கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா? யாருக்கு HRA கிடைக்கும்? அரசின் விளக்கம் இதோ!
Recommended image3
Aviation Fuel: விமான எரிபொருளில் எத்தனால் கலப்பா? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!
Related Stories
Recommended image1
இந்தியாவில் வேலை பார்க்க பெஸ்ட் கம்பெனி எது? ரிலையன்ஸ் எத்தனாவது இடம் தெரியுமா?
Recommended image2
Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved