- Home
- Business
- Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
Post Office Scheme: பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து நல்ல லாபகரமான வருமானமும் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) போஸ்ட் ஆபிஸ் திட்டம் உள்ளது. பணத்தை இரட்டிப்பாக்கும் இந்த திட்டம் குறித்து பார்ப்போம்.
15

Image Credit : Gemini AI
கிசான் விகாஸ் பத்ரா (KVP) என்றால் என்ன?
கிசான் விகாஸ் பத்ரா (KVP) என்பது மத்திய அரசு ஆதரவுடன் தபால் துறை நடத்தும் ஒரு சேமிப்புத் திட்டம். இதை 'பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்'னு கூட சொல்வாங்க. பங்குச் சந்தை ரிஸ்க் எல்லாம் வேணாம், பாதுகாப்பான முதலீடு போதும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ். இதில் போடும் பணத்துக்கு இந்திய அரசே உத்தரவாதம் தருது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Freepik
வட்டி விகிதம் எவ்வளவு? பணம் எத்தனை நாட்களில் இரட்டிப்பாகும்?
தற்போதைக்கு, கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கு ஆண்டுக்கு 7.50% வட்டி தராங்க. இந்த வட்டி விகிதத்துல, நீங்க முதலீடு செஞ்ச பணம் 115 மாசத்துல, அதாவது சுமார் 9 வருஷம் 7 மாசத்துல இரட்டிப்பாகிடும். உதாரணமா, நீங்க 5 லட்சம் ரூபாய் முதலீடு செஞ்சா, முதிர்வு காலத்துல உங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். சந்தை ஏற்ற இறக்கத்தைப் பத்தி கவலைப்படாம, நிலையான வருமானம் கிடைக்கிறதுதான் இந்த திட்டத்தோட பெரிய ப்ளஸ்.
35
Image Credit : India post
எவ்வளவு தொகையுடன் முதலீட்டைத் தொடங்கலாம்?
இந்த திட்டத்துல வெறும் 1,000 ரூபாய்ல இருந்தே முதலீட்டை ஆரம்பிக்கலாம். ஆனா, அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் கிடையாது. முதலீட்டாளர்கள் தங்களோட வசதிக்கு ஏற்ப எவ்வளவு வேணும்னாலும் முதலீடு செய்யலாம். சின்ன தொகையில ஆரம்பிச்சு, போகப் போக பெரிய தொகையையும் முதலீடு செய்ய முடியும்.
45
Image Credit : our own
கணக்கை யார் திறக்கலாம்?
நாட்டுல இருக்குற எந்த போஸ்ட் ஆபீஸ்ல வேணும்னாலும் இந்த திட்டத்துல கணக்கு தொடங்கலாம். ஒருத்தர் தனியாகவோ (Single Account) அல்லது ரெண்டு பேர் சேர்ந்தோ (Joint Account) கணக்கு திறக்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அவங்க பேர்லயும் கணக்கு தொடங்க வசதி இருக்கு. ஆனா, குழந்தை பேர்ல கணக்கு திறக்க, அவங்களுக்கு குறைஞ்சது 10 வயசு ஆகியிருக்கணும்.
55
Image Credit : our own
இந்தத் திட்டத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
பாதுகாப்பான முதலீட்டைத் தேடுறவங்களுக்கு கிசான் விகாஸ் பத்ரா ஒரு நல்ல மாற்று. அரசாங்க உத்தரவாதம், நிலையான வட்டி, பணம் இரட்டிப்பாகுறதுக்கு ஒரு தெளிவான காலம், குறைஞ்சபட்ச முதலீடுனு பல காரணங்களால இந்தத் திட்டம் மக்கள் கிட்ட பிரபலமாகியிருக்கு. நீண்ட காலத்துல பாதுகாப்பா சொத்து சேர்க்க நினைக்குறவங்களுக்கு KVP திட்டம் ஒரு சூப்பர் சாய்ஸ்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos

