MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI Update: இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா.?! தெரிஞ்சுக்காட்டி ரொம்ப கஷ்டம்.!

UPI Update: இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா.?! தெரிஞ்சுக்காட்டி ரொம்ப கஷ்டம்.!

UPI பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பேலன்ஸ் சரிபார்ப்பு, Recurring Payments, Auto Debit நேரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 01 2025, 07:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்
Image Credit : Gemini

கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

UPI (Unified Payments Interface) எனப்படும் யுபிஐ பரிவர்த்தனை முறை, இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையாக உள்ளது. இந்த பயன்பாட்டின் வேகமான வளர்ச்சியை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் சில புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
பேலன்ஸ் சரிபார்ப்பு – தினசரி வரம்பு
Image Credit : Google

பேலன்ஸ் சரிபார்ப்பு – தினசரி வரம்பு

இனிமேல், யுபிஐ செயலிகளில் (Google Pay, PhonePe, Paytm போன்றவை) உங்கள் வங்கி கணக்கின் மீதி தொகையை (Balance) சரிபார்க்கும் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே. இது ஒரு செயலிக்கு மட்டும் அல்ல; நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலிக்குமான தனித்தனி 50 வரம்பு ஆகும். இந்த கட்டுப்பாடுகள் வங்கிகளின் மீது வரும் அதிக கோரிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வரவேற்கப்படுகின்றன.

38
Recurring Payments மற்றும் Auto Debit நேரங்கள்
Image Credit : Gemini\Meta AI

Recurring Payments மற்றும் Auto Debit நேரங்கள்

UPI மூலம் செயல்படும் மறு கட்டணங்கள் (Recurring payments) மற்றும் தானாக பணம் பிடிக்கும் (Auto debit) நடைமுறை இப்போது குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படும்.

  • முற்பகல்: காலை 10 மணி முன்பு
  • பிற்பகல்: மதியம் 1 மணி முதல் 5 மணி வரை
  • இரவு: 9:30 மணி பிறகு

இவை தவிர, பிக் ஹவர் (Busy Hour) எனப்படும் காலை 10 மணி முதல் 3 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 9:30 மணி வரை, தானாக நடைபெறும் பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடு, முக்கிய நேரங்களில் சேவையில் தடங்கல் ஏற்படாமல் இருக்க வகைபடுத்தப்பட்டுள்ளது.

48
Autopay தோல்விகள் – மீண்டும் முயற்சி
Image Credit : Gemini

Autopay தோல்விகள் – மீண்டும் முயற்சி

Autopay mandate (தானாக பணம் பிடிக்கும் முறை) செயல்பாட்டில் தவறுகள் ஏற்படுமானால், சில முறை மீண்டும் முயற்சி செய்யப்படும். இது பயனரின் கணக்கில் பணம் இல்லாமையால் அல்லது பிற தொழில்நுட்ப காரணங்களால் ஏற்படக்கூடியது. மீண்டும் முயற்சி செய்தும் தோல்வி ஏற்பட்டால், அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

58
Mobile-linked account requests – தினசரி 25 முறைகள்
Image Credit : GEMINI

Mobile-linked account requests – தினசரி 25 முறைகள்

பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் பட்டியலை பெறும் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு 25 முறைகள் மட்டுமே இத்தகவலை பெற அனுமதி உள்ளது. இது பாதுகாப்பு காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

68
Payment Status – தெளிவான நிலை
Image Credit : gemini

Payment Status – தெளிவான நிலை

UPI பரிவர்த்தனைகள் நடந்ததும், அதன் நிலை (Status) “Pending” அல்லது “Processing” என்ற பொதுவான வார்த்தைகள் இல்லாமல், சரியான, தெளிவான விவரத்துடன் காட்டப்பட வேண்டும். மேலும் பயனர்கள் ஒரே பரிவர்த்தனையின் நிலையை அதிகபட்சம் 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையே 90 விநாடிகள் இடைவெளியாக இருக்க வேண்டும்.

78
பெறுநர் பெயர் – முன்பதிவு கண்டிப்பு
Image Credit : Google

பெறுநர் பெயர் – முன்பதிவு கண்டிப்பு

இனிமேல் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் முன், பெறுநரின் பதிவு செய்யப்பட்ட பெயர் திரையில் தோன்றும். இது தவறான முகவரிக்கு பணம் அனுப்பப்படுவதை தவிர்க்க உதவுகிறது. பயனர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

88
வேக அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
Image Credit : social media

வேக அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகள், யுபிஐ பரிவர்த்தனைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சேவையில் சீரான செயல்பாட்டை வழங்கவும் இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) மற்றும் வங்கிகளால் அமல்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கைகள், எதிர்கால இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக விளங்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
UPI கொடுப்பனவு
UPI பரிவர்த்தனை வரம்பு
UPI பரிவர்த்தனைகள்
வணிகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
ரூ.50 லட்சம் காப்பீடு: 18 முதல் 65 வயது வரை; எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்!
Recommended image3
Astrology: ஜோசியம் பார்த்து ரூ.1800 கோடி வருமானம்.! உண்மையில் கோடீஸ்வர யோகம் இதுதான்.! யாருக்கு தெரியுமா?
Related Stories
Recommended image1
சாதனை படைத்த UPI payment.! இந்தியாவை திரும்பி பார்க்கும் சர்வதேச நாடுகள்! டிஜிட்டெல் இந்தியா ராக்ஸ்!
Recommended image2
கேஷ்பேக்கிற்கு குட்பை! கூப்பன்களுக்கு வெல்கம்! UPI செயலிகளின் ரகசிய திட்டம் இதான் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved