Trump Tax War: அமெரிக்க வரி போரில் இந்தியா சிக்கியதா.?! அதெல்லாம் சும்மாவா.!
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், மத்திய அரசு வட்டாரங்கள் இது தற்காலிகமானது என தெரிவிக்கின்றன.
நட்புக்கு செக் வைத்தாரா டிரம்ப்?!
எல்லா நாடுகளையும் பயமுறுத்தி வந்த அமெரிக்கா தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. இரு நாட்கள் இடையேயும் வரி விதிப்பு குறித்த பேச்சு வார்த்தை அரசாங்க ரீதியில் நடந்து வந்ததாக கூறப்படும் நிலையில், அது இந்தியாவுக்கு சாதகமான முடிவை தரவில்லை. அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர் வெளியிடும் பொருளாதார உத்திகள் உலகளவில் கவனிக்கப்படுகின்றன. சமீபத்தில், அவர் கூறியுள்ள புதிய அறிவிப்பு ஒன்று இந்தியாவையும் நேரடியாக தாக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீது 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். நாளை முதல் இது அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில்...
இது தவிர ஏப்ரல் மாதத்தில், பரஸ்பர வரிகள்' என்று பெயரிடப்பட்ட இந்தியா உட்பட 100 -க்கணக்கான நாடுகள் மீது அமெரிக்கா வரிகளை அறிவித்தது. இது தவிர, 10 சதவீத அடிப்படை கட்டணமும் விதிக்கப்பட்டது. 10 சதவீத அடிப்படை வரி என்பது பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு ஒரு ரூபாய் வரி விதிக்கப்படும், இதனால் இறக்குமதியாளரின் மொத்த செலவு 11 ரூபாயாக அதிகரிக்கும்.
இந்த வரி யாருக்கென்ன பாதிப்பு?
இந்திய தொழில் நிறுவனங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அமெரிக்கா போன்ற பெரிய சந்தையில் ஏற்கனவே நுழைந்துள்ள Tata Motors, Mahindra, TVS போன்ற நிறுவனங்களுக்கு இது பெரும் இறக்குமதி சிக்கல் ஏற்படுத்தும். Tata's Jaguar Land Rover ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனையை நம்பி இருக்கிறது. இப்போது அதற்கான கம்போனெண்டுகள் அல்லது தயாரிப்பு அமெரிக்காவுக்கு செல்லும் போது 25% வரி என்றால், விலை அதிகரித்து போட்டியாளர்களிடம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.
சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)
பிளாஸ்டிக், ஸ்டீல், டெக்ஸ்டைல், பைக்ஸ், கம்ப்யூட்டர் பாகங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நஷ்டமடைய வாய்ப்பு அதிகம். வரி காரணமாக அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஆடர்களை குறைக்கலாம்.
இந்தியா எப்படிச் சமாளிக்க முடியும்?
- இந்தியா அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்.
- மற்ற சந்தைகள் – யூரோப்பிய யூனியன், ஆசியா, ஆஃப்ரிக்கா போன்றவற்றில் புது வாய்ப்புகள் தேட வேண்டும்.
- உள்நாட்டு சந்தை வளர்ச்சியையே முக்கியமாக கருதி, உற்பத்தி விகிதங்களை சீர்செய்ய வேண்டும்.
தற்காலிகமானது... அதெல்லாம் சும்மா.!
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஐந்து சுற்று பேச்சுவார்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், டிரம்ப் 25 சதவீத வரியை அமல்படுத்தும்பட்சத்தில் அது தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேச்சு வார்த்தை முடியாத பட்சத்தில் வரி விதிப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை என்வும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சில கருத்துவேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. சோயாபீன்ஸ் மற்றும் சோளம் போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இறக்குமதி செய்வது, உள்நாட்டு பால் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறப்பது உள்ளிட்டவற்றில் இரு நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.