MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Chennai Real Estate 2026: சென்னையில் வீடு வாங்க போறீங்களா? உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற டாப் 8 இடங்கள் இதோ!

Chennai Real Estate 2026: சென்னையில் வீடு வாங்க போறீங்களா? உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற டாப் 8 இடங்கள் இதோ!

Chennai Real Estate 2026: சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்பது அங்கு வாடகைக்கு குடியிருப்பவர்களின் இமாலய கனவு. உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சென்னையில் வீடு வாங்க ஏதுவான 8 இடங்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 08 2026, 09:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி
Image Credit : AI

சென்னையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி

சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை ஆரவாரமின்றி அமைதியாக ஆனால் உறுதியாக வளர்ந்து வருகிறது. 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் சுமார் 9,198 வீடுகள் விற்பனையாகியுள்ளன; இது கடந்த ஆண்டை விட 3% அதிகம். இந்த வளர்ச்சி, வீடு வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சென்னையின் மீதுள்ள நம்பிக்கையைத் தெளிவாகக் காட்டுகிறது.

சதுர அடியின் சராசரி விலை 5% உயர்ந்து ரூ.7,555 ஆக உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், விற்பனையான வீடுகளில் 47% ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான நடுத்தரப் பிரிவு வீடுகள்தான். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம் போன்றவை இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன.

இதையும் படிங்க: HRA Rules: கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா? யாருக்கு HRA கிடைக்கும்? அரசின் விளக்கம் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓ.எம்.ஆர் காரிடார்: ஐ.டி ஊழியர்களின் முதல் சாய்ஸ்
Image Credit : AI

ஓ.எம்.ஆர் காரிடார்: ஐ.டி ஊழியர்களின் முதல் சாய்ஸ்

சென்னையின் ஐ.டி தலைநகரமாக விளங்கும் ஓ.எம்.ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் மையமாகத் திகழ்கின்றன. சோழிங்கநல்லூரில் அமையவிருக்கும் மெட்ரோ சந்திப்பு, இப்பகுதியின் மதிப்பை இன்னும் கூட்டுகிறது. ஐ.டி நிறுவன ஊழியர்கள் அருகிலேயே வசிக்க விரும்புவதால், இங்கு வாடகைக்கான தேவை 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இங்கு சதுர அடி விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை செல்கிறது.

சற்று பட்ஜெட்டைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, தெற்கே உள்ள நாவலூர், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகள் சிறந்த தேர்வாக இருக்கும். சிறுசேரி சிப்காட் ஐ.டி பூங்கா மற்றும் புதிய டேட்டா சென்டர் முதலீடுகளால், இங்கு வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. இப்பகுதிகளில் சதுர அடி விலை ரூ.5,000 முதல் ரூ.7,500 என்ற அளவில் கிடைப்பது ஒரு பெரிய ப்ளஸ்.

இதையும் படிங்க: ITR Refund 2026: மொபைல், பார்ட்டினு வீணாக்காதீங்க! ரீஃபண்ட் பணத்தை வைச்சு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

34
அசுர வளர்ச்சி காணும் ஜி.எஸ்.டி சாலை
Image Credit : Chatgpt

அசுர வளர்ச்சி காணும் ஜி.எஸ்.டி சாலை

சென்னை விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பல்லாவரம், 2026-ன் அதிவேக வளர்ச்சிப் பகுதியாக உருவெடுத்துள்ளது. பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஐ.டி காரிடாரையும் விமான நிலையத்தையும் இணைப்பதால், முதலீட்டாளர்களின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியுள்ளது. இங்கு சதுர அடி விலை ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை இருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் சொந்தமாக இடம் அல்லது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு தாம்பரம் மற்றும் ஓரகடம் பகுதிகள் சரியான தேர்வாக அமையும். ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த ஓரகடம் பகுதியில் சதுர அடி விலை ரூ.4,000 முதல் ரூ.6,000 என்ற மலிவான விலையில் கிடைக்கிறது. நீண்ட கால நோக்கில் இப்பகுதியின் நில மதிப்பு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
மத்திய மற்றும் மேற்கு சென்னையின் பிரீமியம் பகுதிகள்
Image Credit : AI

மத்திய மற்றும் மேற்கு சென்னையின் பிரீமியம் பகுதிகள்

நகரத்திற்குள்ளேயே அனைத்து வசதிகளுடன் வாழ விரும்புவோருக்கு முகப்பேர் மற்றும் அண்ணா நகர் மேற்கு பகுதிகள் ஏற்றவை. மெட்ரோ இணைப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதால், இங்கு சதுர அடி விலை ரூ.8,500 முதல் ரூ.13,000 வரை சற்று அதிகமாகவே உள்ளது. இதேபோல, மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளால் போரூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளும் நடுத்தரக் குடும்பங்களின் விருப்பமான இடங்களாக மாறி வருகின்றன.

சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகள் எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பைக் கொடுக்கின்றன. தொழிலதிபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வசிக்கும் இப்பகுதிகளில், அடையாறில் சதுர அடி விலை ரூ.13,000 முதல் ரூ.18,000 வரையிலும், வேளச்சேரியில் ரூ.9,000 முதல் ரூ.13,000 வரையிலும் விற்பனையாகிறது.

சுருக்கமாக, உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து சென்னையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன், தமிழ்நாடு RERA அங்கீகாரம் மற்றும் CMDA அனுமதிகளைச் சரிபார்த்து, திட்டப் பகுதியை நேரில் ஆய்வு செய்வது மிகவும் அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
வணிகம்
ரியல் எஸ்டேட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Related Stories
Recommended image1
TN Budget 26 - 27: சிங்கப்பூர் போல மாறப்போகும் சென்னை! கூவம் ஆற்றில் படகு சவாரி... தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்புகள்!
Recommended image2
UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? குட் நியூஸ் சொன்ன பேமெண்ட்ஸ் கவுன்சில்! இனி கவலை இல்லை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved