MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • எந்த நாட்டில் தங்கம் விலை மிகவும் குறைவு? இந்தியாவை விட இவ்வளவு மலிவா?

எந்த நாட்டில் தங்கம் விலை மிகவும் குறைவு? இந்தியாவை விட இவ்வளவு மலிவா?

தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாக இருந்தாலும், அதன் விலை நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவை விட மலிவாக தங்கம் கிடைக்கும் சில நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Oct 17 2024, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold Rates

Gold Rates

தங்கம் என்பது பல நூறு ஆண்டுகளாகவே பாதுகாப்பான மற்றும் விருப்பமான முதலீடாக கருதப்படுகிறது. இன்றும் கூட தங்கத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். தங்கம் ஒரு உறுதியான சொத்தாக இருப்பதால், அதன் மதிப்பின் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. 

பல தசாப்தங்களாக உலக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியர்களை தங்கம் வாங்க தூண்டுவது எது? முதலீடு மற்றும் செல்வத்தை உருவாக்கும் கருவியாக செயல்படுவதை தாண்டி, தங்கம் குறிப்பிடத்தக்க கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக திருமணங்களில் தங்க நகைகள் அவசியமான சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Countries Has The Cheapest Gold Rates

Countries Has The Cheapest Gold Rates

இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி போன்ற சிறப்புப் பண்டிகைகளிலும் தங்கம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுவாக பண்டிகைக் காலங்களில்  தங்கத்தின் விலை உயரும். தங்கத்தின் விலை உலகளவில் மாறுபடும், நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்தியாவை விட மலவான விலையில் தங்கம் விற்பனை செய்யப்படும் சில நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தோனேசியா

இந்தோனேசியா ஒரு கிழக்கு ஆசிய நாடாகும். உலகிலேயே மலிவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தோனேசியா நாட்டின் பணத்தின் படி, அங்கு 4 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,330,266 என்ற விலைக்கு கிடைக்கிறது. 10 கிராமுக்கு ரூ.71,880 ஆகும். இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,700 ஆக இருந்தது. இதனால் இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே 10 கிராம் தங்கத்தில் ரூ.5,820 விலை வித்தியாசம் உள்ளது.

தங்கத்தை வாங்க இது சரியான நேரமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த டைம்!

35
Countries Has The Cheapest Gold Rates

Countries Has The Cheapest Gold Rates

மலாவி

மலாவி ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாடு. அந்த நாட்டில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,482,660.70 MWK (மலாவியன் குவாச்சா) ஆக இருந்தது, அதாவது 10 கிராமுக்கு ரூ.72,030. இந்தியாவின் இன்றைய 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,700-க்கு ஒப்பிடும்போது, ​​10 கிராமுக்கு ரூ.5,670 வித்தியாசம் உள்ளது.

ஹாங்காங்

ஹாங்காங் சீன மக்கள் குடியரசின் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி. இந்த நாட்டில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு HKD 665 அல்லது 10 கிராமுக்கு ரூ.72,050 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை இந்தியாவில் தற்போது 10 கிராமுக்கு ரூ.77,700 ஆக இருக்கும் நிலையில், 10 கிராமுக்கு ரூ.5,650 விலை வித்தியாசம் உள்ளது.

45
Countries Has The Cheapest Gold Rates

Countries Has The Cheapest Gold Rates

கம்போடியா

கம்போடியாவில் தரமான தங்கத்திற்கு பெயர் பெற்ற நாடாகும். இந்த நாட்டில் 24 காரட் தங்கத்தின் விலை இந்தியாவை விட மிகவும் குறைவு. அக்டோபர் 12 அன்று, கம்போடியாவில் தங்கத்தின் விலை 347,378.43 KHR (கம்போடியன் ரியல்) அல்லது 10 கிராமுக்கு ரூ.72,060 ஆக இருந்தது.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் துபாய் ஒன்றாகும். அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல்-குவைன், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகியவை மற்ற 6 எமிரேட்ஸ். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற மற்ற நாடுகளை விட ஒப்பிடும்போது துபாயில் தங்கம் விலை மலிவாக உள்ளது. மேலும் துபாயின் தங்கத்தின் மீதான வரியும் குறைவாக உள்ளது. இதனால் தரமான தங்கம் வாங்குவதற்கு துபாய் பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது.

2025ல் தங்கத்தின் விலை இவ்வளவு உயருமா!எவ்வளவு தெரியுமா? உடனே வாங்கி போடுங்க

55
Countries Has The Cheapest Gold Rates

Countries Has The Cheapest Gold Rates

அக்டோபர் 12, 2024 அன்று, துபாயில் 24 காரட் தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு AED 3180.25 (சுமார் ரூ. 72,840) என விற்கப்பட்டது.. இந்தியாவில் உள்ள 24 காரட் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில், 10 கிராமுக்கு ரூ.4,860 விலை வித்தியாசம் உள்ளது.

இதன் மூலம் இந்தோனேஷியா, மலாவி, ஹாங்காங், கம்போடியா மற்றும் துபாய் போன்ற நாடுகள் இந்தியாவை விட மலிவான விலையில் தங்கத்தை வழங்குகின்றன. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்தியா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved