- Home
- Business
- சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு..! அடேங்கப்பா! இவ்வளவா? வாகன ஓட்டிகள் ஷாக்..!
சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு..! அடேங்கப்பா! இவ்வளவா? வாகன ஓட்டிகள் ஷாக்..!
தமிழ்நாட்டின் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Toll Plaza Rates Increased in Tamil Nadu from Midnight
இந்தியா முழுவதும் தேசிய நெஞ்சாலைகளில் டோல் கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1,44,634 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த டோல் கேட்டில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிகுவத்து நிற்பதை தவிர்க்க ஆன்லைன் வாயிலாக சுங்ககட்டணம் கட்டும் பாஸ்ட் டேக் (FASTag) சேவையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளன.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தமிழ்நாட்டை பொறுத்தவரை தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் நாளை (அதாவது இன்று நள்ளிரவு) முதல் உயர உள்ளது. ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே நாட்டில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவு உள்ளது.
மக்கள் பெரும் பாதிப்பு
பெட்ரோல், டீசல் விலையும் இறக்கை கட்டி பறக்கிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு மக்கள் மீது பெரும் சுமையை வைத்துள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி வெளிப்படையான கேள்வி
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டண உயர்வு ஊர்தி வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும்.
சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும். ஆகவே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.