அடிச்சது ஜாக்பாட்.. தங்கம் விலை சரிவு.. இன்றைய நிலவரம்
இந்தியா-பாகிஸ்தான் நிலைமைக்கு மத்தியில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Today Gold Silver Price
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நிலைமைக்கு மத்தியில், நீண்ட நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று (மே 12) குறைந்துள்ளதோடு முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.165 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.8,880-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இன்று
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.130 சரிவடைந்துள்ளது. இந்நிலையில் 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,320-க்கும், ஒரு சவரன் ரூ.58,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளியின் விலைப்போகும் போது, ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மாற்றங்கள்
இந்த விலை மாற்றங்கள், சர்வதேச நிலவரங்கள் மற்றும் சந்தை உணர்வுகளால் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.