MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்தது தங்கம் விலை..

Today Gold Rate : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்தது தங்கம் விலை..

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்து ரூ. 54,340க்கு விற்பனையாகிறது.

1 Min read
Author : Ramya s
Published : Apr 15 2024, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

26

அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஓராண்டாகவே தங்கள் விலை அதிகரிப்பதும் பின்னர் குறைவதும் என்ற நிலை நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரனமாக தங்கம் விலை உச்சத்தை எட்டியது.

36
Gold Prices Are Rising- Should you buy now or wait

Gold Prices Are Rising- Should you buy now or wait

எனினும் அவ்வப்போது தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

46
gold

gold

குறிப்பாக கடந்த 22 நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இனி தங்கத்தை வாங்க முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழ் புத்தாண்டு தினமான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54,540-க்கு விற்பனையானது. 

56

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.அதன்படி ஏப்ரல் 15-ம் தேதியான இன்று 22 கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.6,790க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ. 54,340க்கு விற்பனையாகிறது.

 

66

எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. பென்ஷன் தொகை உயருகிறதா? நாடாளுமன்ற நிலைக்குழு சொன்ன குட்நியூஸ்!
Recommended image2
Crude Oil Prices: அடிமாட்டு விலைக்கு கிடைக்குமா கச்சா எண்ணெய்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன?!
Recommended image3
தங்கம், வெள்ளி இரண்டுமே சரிவு.. இப்போ வாங்கினா லாபமா? நிபுணர்கள் அட்வைஸ் இதுதான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved