- Home
- Business
- சரசரவென இன்றும் குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவு தானா.? நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி
சரசரவென இன்றும் குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவு தானா.? நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக யாரும் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரசரவென இன்றும் குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவு தானா.?
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 60 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. அதன் படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளின் மீது வரி விதிப்பு காரணமாக வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை 80ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாயை எளிதாக எட்டிவிடும் என தங்க நகை வியாபரிகள் தெரிவிக்கிறார்கள்.
திடீரென குறைந்த தங்கம் விலை
இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலையானது யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 8.050 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இரண்டு நாட்களாக சரிந்த தங்கம் விலை
இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது சரிந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து சவரனுக்கு 8,010 ரூபாய்க்கும், 320 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.