MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 7 Lakh Cover: உங்க சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயும் பிடிக்க மாட்டாங்க.. ஆனா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்!

7 Lakh Cover: உங்க சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயும் பிடிக்க மாட்டாங்க.. ஆனா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்!

7 Lakh Cover: பலர் பிஎப் நாமினி விவரங்களை புதுப்பிக்காமல் இருப்பதால், குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய EDLI பலன் தடைபடுகிறது. இன்று இரண்டு நிமிடம் ஒதுக்கி e-Nomination அப்டேட் செய்தால், எதிர்காலத்தில் அது மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 14 2026, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் பாதுகாப்பு
Image Credit : our own

குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் பாதுகாப்பு

பிஎப் கணக்கு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது ஓய்வூதிய கால சேமிப்புதான். ஆனால், அதனுடன் இணைந்திருக்கும் Employee Deposit Linked Insurance (EDLI) திட்டம் குறித்து இன்னும் ஏராளமான ஊழியர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. வேலையில் இருக்கும் போது எதிர்பாராத விதமாக ஊழியர் உயிரிழந்தார், அவரது குடும்பம் உடனடி நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முக்கியமான விஷயம், இதற்கான பிரீமியத்தை ஊழியர் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பாதுகாப்பு
Image Credit : our own

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பாதுகாப்பு

EDLI திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சமும், அதிகபட்சமாக ரூ.7 லட்சமும் குடும்பத்துக்கு கிடைக்கும். இறப்பதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்படுகிறது. கணக்குப்படி அதிக தொகை வந்தாலும், தற்போதைய உச்ச வரம்பு ரூ.7 லட்சமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Aadhaar Mobile Number: ஆதாரில் மொபைல் எண்ணை எத்தனை முறை மாற்றலாம்? பலருக்கும் தெரியாத விதி!
Related image2
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
35
யாருக்கெல்லாம் இந்த பலன் கிடைக்கும்?
Image Credit : our own

யாருக்கெல்லாம் இந்த பலன் கிடைக்கும்?

பிஎப் பிடித்தம் செய்யப்படும் நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியான ஊழியர்கள் அனைவரும் தானாகவே EDLI திட்டத்தின் கீழ் வருவார்கள். சம்பள அளவு இதில் தடையாக இருக்காது. ஆனால், ஊழியர் பணியில் இருக்கும் காலத்திலேயே மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை. பிஎப் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

45
கிளைம் செய்யும் நடைமுறை எளிது
Image Credit : our own

கிளைம் செய்யும் நடைமுறை எளிது

இறப்புச் சான்றிதழ், வங்கி விவரங்கள், ஆதார் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களுடன் படிவம் 5IF ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தற்போது UAN போர்டல் மூலமாக ஆன்லைனிலும் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், பொதுவாக 30 நாட்களுக்குள் தொகை வழங்கப்படும்.

55
அதிகம் நடக்கும் தவறு இதுதான்
Image Credit : our own

அதிகம் நடக்கும் தவறு இதுதான்

பிஎப் கணக்கில் நாமினி விவரங்களை புதுப்பிக்காமல் விடுவது தான் பெரும்பாலான குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை. திருமணம், குழந்தை பிறப்பு போன்ற வாழ்க்கை மாற்றங்களுக்குப் பிறகு மின்-நாமினேஷன் விவரங்களை உடனுக்குடன் புதுப்பிப்பது அவசியம். இன்று இரண்டு நிமிடம் செலவழித்து இதை சரிபார்ப்பது, நாளை உங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பாக மாறக்கூடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுதல்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Ticket: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? இனி முன்கூட்டியே தெரிஞ்சிக்கலாம்.!
Recommended image2
PM-VBRY: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
Recommended image3
40 வயதிற்குள் கோடீஸ்வரர் ஆவது எப்படி? பொருளாதார வல்லுனர்கள் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்
Related Stories
Recommended image1
Aadhaar Mobile Number: ஆதாரில் மொபைல் எண்ணை எத்தனை முறை மாற்றலாம்? பலருக்கும் தெரியாத விதி!
Recommended image2
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved