தங்கப் பத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு! முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பு!
Sovereign Gold Bond 2025: நீங்களும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2025 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் முன்கூட்டியே முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான தேதிகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

Sovereign Gold Bond 2025
முதலீட்டாளர்கள் தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே மீட்டெடுக்க விரும்பினால், அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி பிப்ரவரி 21, 2025 அன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
RBI announcement on Sovereign Gold Bond (SGB)
அக்டோபர் 22, 2021 தேதியிட்ட IDMD.CDD.1100/14.04.050/2021-22 சுற்றறிக்கையின் கீழ் வெளியிடப்பட்ட தங்கப் பத்திர (SGB) திட்டத்தின் ஒருங்கிணைந்த நடைமுறை வழிகாட்டுதல்களின் பத்தி 13 இன் படி, பத்திரங்கள் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே பணமாக்க அனுமதிக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 01, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரையிலான காலகட்டத்தில் தங்கப் பத்திரங்களின் மீட்பு தேதியின் விவரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
Sovereign Gold Bond premature redemption dates
தங்கப் பத்திரம் தங்கத்தில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்து வட்டி சம்பாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்திற்காக தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது. தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு, அத்தகைய பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு அனுமதி வழங்கப்படுகிறது.
Sovereign Gold Bond premature redemption rules
தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்தத் தகவலை நினைவில் கொள்ள வேண்டும். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் முன்கூட்டியே மீட்டெடுக்கக்கூடிய தங்கப் பத்திரங்கள் பற்றிய தகவல்களை ஆjர்பிஐ வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்கள் ஏற்பட்டால் அதற்கு ஏற்ப முன்கூட்டியே மீட்டெடுக்கும் தேதிகள் மாறக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. முதலீட்டாளர்கள் முதிர்ச்சிக்கு முன்னர் தங்கள் தங்கப் பத்திரத்தை மீட்டெடுக்க விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை கோரிக்கை காலத்தைக் குறித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
What is கSovereign Gold Bond?
இந்திய அரசாங்கத்தின் சார்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, தங்கப் பத்திரங்களை (Sovereign Gold Bond) வெளியிடுகிறது. 2015ஆம் ஆண்டு தொடங்கி, ரிசர்வ் வங்கி 67 தங்கப் பத்திர தவணைகளை அறிமுகப்படுத்தி, 14.7 கோடி யூனிட்களை வெளியிட்டுள்ளது. அவை BSE மற்றும் NSE சந்தைகளில் ரொக்கப் பிரிவில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. சில்லறை முதலீட்டாளர்கள் அவற்றை டீமேட் கணக்குகள் மூலம் வாங்கலாம் அல்லது விற்கலாம். இந்தத் தங்கப் பத்திரங்களின் முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள். ஆனால் அவற்றை முன்கூட்டியே மீட்டுக்கொள்ளும் வசதி ஐந்து வருட லாக்-இன் காலம் முடிந்த பிறகு வழங்கப்படுகிறது.