உங்கள் குழந்தை கோடிஸ்வரன் ஆகணுமா? இப்பவே SIP முதலீட்டை ஸ்டார்ட் பண்ணுங்க!
SIP Investment formula for Child's Future: பெற்றோர்கள் குழந்தை பிறந்த உடனேயே அவர்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யத் தொடங்குவதுதான் புத்திசாலித்தனம். நல்ல வருமானம் கிடைக்கும் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். SIP முதலீடு பணவீக்கத்திற்கு ஈடான வருமானத்தை வழங்கி வருகிறது.
SIP Investment formula for Child's Future
ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அதற்காக அவரவர் வழியில் திட்டமிடுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தை பிறந்த உடனேயே அவர்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யத் தொடங்குவதுதான் புத்திசாலித்தனம். நல்ல வருமானம் கிடைக்கும் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். SIP முதலீடு பணவீக்கத்திற்கு ஈடான வருமானத்தை வழங்கி வருகிறது.
21x10x12 SIP Investment formula
SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, இந்தத் திட்டம் உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். இந்த அளவு லாபத்தை வேறு எந்த சிறுசேமிப்புத் திட்டத்திலிருந்தும் பெற முடியாது. இத்தொகுப்பில் உங்கள் குழந்தையை 21 வயதில் கோடீஸ்வரனாக்கக்கூடிய SIP முதலீட்டு ஃபார்முலாவைத் தெரிந்துகொள்ளலாம்.
SIP Investment Plan
21x10x12 என்ற ஃபார்முலாவின் படி, குழந்தை பிறந்தவுடன் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது SIP முதலீட்டை 21 ஆண்டுகள் தொடர வேண்டும். இந்த ஃபார்முலாவில் 10 என்றால் 10,000 ரூபாய். அதாவது, குழந்தையின் பெயரில் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். 12 என்றால் இந்த முதலீட்டுக்குக் கிடைக்கும் சராசரி வருமானம்.
SIP for Child's Future
இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தை பிறந்தவுடனேயே அவர் பெயரில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபியைத் தொடங்கி 21 வருடங்கள் தொடர்ந்தால், 21 ஆண்டுகளில் மொத்தம் ரூ.25,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த SIP முதலீட்டுக்கு சராசரி வருவாய் 12% என்று கணக்கிட்டால், 21 வருடங்களில் ரூ.88,66,742 வட்டியாகக் கிடைக்கும்.
SIP Investment in Mutual Funds
21 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த தொகையையும் வட்டியையும் சேர்த்து மொத்தம் ரூ.1,13,86,742 கிடைக்கும். இதன் மூலம் உங்கள் மகனோ மகளோ 21 வயதிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு உரிமையாளராகிவிடுவார். இந்தப் பணத்தில் அவர்களின் எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
(பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன், ஆவணங்களைக் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்.)