MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 1 Rupee candy business: பல தசாப்தங்களாக 1 ரூபாய் சாக்லேட்டின் விலை மட்டும் மாறாதது ஏன்? பின்னால் ஒளிந்திருக்கும் மாஸ்டர் பிளான்!

1 Rupee candy business: பல தசாப்தங்களாக 1 ரூபாய் சாக்லேட்டின் விலை மட்டும் மாறாதது ஏன்? பின்னால் ஒளிந்திருக்கும் மாஸ்டர் பிளான்!

பால், டீ விலை உயர்ந்தாலும் ரூ.1 மிட்டாய் இன்றும் அதே விலையில் கிடைப்பது எப்படி? நிறுவனங்களின் 'ஷ்ரிங்க்ஃபிளேஷன்' தந்திரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய பொருளாதார ரகசியத்தை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 04 2026, 07:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இன்றும் 1 ரூபாய்க்கு மிட்டாய் கிடைப்பது எப்படி?
Image Credit : Gemini

இன்றும் 1 ரூபாய்க்கு மிட்டாய் கிடைப்பது எப்படி?

பால், டீ, காபி என நாம் அன்றாடம் வாங்கும் அத்தனை பொருட்களின் விலையும் தாறுமாறாக எகிறிவிட்ட இந்தக் காலத்திலும்... நாம் சிறு வயதில் ஆசையாக வாங்கிய அதே ரூ.1 மிட்டாய், இன்றும் பெட்டிக்கடைகளில் அதே ரூ.1-க்கு எப்படிக் கிடைக்கிறது? கம்பெனிகள் நஷ்டத்தில் விற்கிறார்களா? இல்லை, நம்மிடம் ஏதேனும் மாயாஜாலம் செய்கிறார்களா? இந்த மர்மத்தின் பின்னணியை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விலை மாறல... ஆனா எடை குறைஞ்சிருச்சா?
Image Credit : chatgpt

விலை மாறல... ஆனா எடை குறைஞ்சிருச்சா?

ஒரு மிட்டாயைத் தயாரிக்க ஆகும் செலவு 10% அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கணக்குப்படி பார்த்தால், அதன் புதிய விலை ரூ.1.10 பைசா என்று மாற வேண்டும். ஆனால், நிஜத்தில் ரூ.1.10 என்பது சில்லறை வியாபாரத்தில் தலைவலியான விஷயம். ஏனென்றால், அதற்கு 10 பைசா சில்லறை வேண்டும். ஆனால், நம்மிடம் இப்போது 10 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லையே. அப்படியென்றால், நடைமுறையில் அடுத்ததாக வைக்கக்கூடிய ஒரே விலை ரூ.2 மட்டுமே.

வெறும் 10% தயாரிப்புச் செலவு கூடினால் கூட, அந்த நிறுவனத்திற்கு 2 வழிகள்தான் உண்டு. விலையை பழையபடி ரூ.1 ஆகவே தொடர வேண்டும் அல்லது விலையை தடாலடியாக ரூ.2 ஆக இரட்டிப்பாக்க வேண்டும். ஆனால், விலையை ரூ.2 ஆக்கினால் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. அந்த மிட்டாய் இவ்வளவு எளிதாக விற்பனையாவதற்கே ஒரே ஒரு தாரக மந்திரம்தான் காரணம் ஒரு நாணயம்... ஒரு மிட்டாய்... எந்த கணக்கும் இல்லை. விலையை இரட்டிப்பாக்கினால், மக்களின் இந்த எளிமையான மனநிலை உடைந்துபோய் விற்பனை சரிந்துவிடும்.

33
நஷ்டத்தில் விற்கிறார்களா மிட்டாய் நிறுவனங்கள்?
Image Credit : chatgpt

நஷ்டத்தில் விற்கிறார்களா மிட்டாய் நிறுவனங்கள்?

அங்கேதான் ஆரம்பமானது அந்த வித்தை 'ஷ்ரிங்க்ஃபிளேஷன்' (Shrinkflation). விலையை ஏற்ற முடியாததால் நிறுவனங்கள் வேறு வழியைக் கையில் எடுத்தன. மிட்டாயின் விலையை இரட்டிப்பாக்குவதற்கு பதிலாக, மிட்டாயையே உள்ளுக்குள் சுருக்க தொடங்கினார்கள். இதற்கு பொருளாதாரத்தில் ‘ஷ்ரிங்க்ஃபிளேஷன்’ (Shrinkflation) என்று பெயர். அதாவது, விலையை உயர்த்த மாட்டார்கள்; ஆனால் அதே விலைக்கு நமக்கு கொடுக்கும் பொருளின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவிடுவார்கள்.

தயாரிப்பு முறையில் கொஞ்சம் மலிவான மூலப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். மிட்டாயின் உள்ளே இருக்கும் கிரீம் அல்லது திரவக் கலவையை (filling) மெலிதாக்கி விடுகிறார்கள். மிட்டாயின் எடையில் ஒரு கிராம் அல்ல, ஒரு கிராம்-ல் சில துளிகள் அமைதியாக மாயமாகி விடுகின்றன. மிட்டாயைச் சுற்றியிருக்கும் உறையின் (wrapper) எடை கூட லேசாக்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பில் எங்கு முடியுமோ அங்கெல்லாம் செலவுகளை இறுக்கிப் பிடிக்கிறார்கள். இவ்வளவு தந்திரங்களும், வித்தைகளும் எதற்காகத் தெரியுமா? அந்த ரூ.1 என்ற மாயாஜால விலையைக் காலங்கள் கடந்தும் நம் கண்களுக்கு அப்படியே நிலைநிறுத்திக் காட்டுவதற்குத்தான்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிக யோசனை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card: 6 மாதமா ரேஷன் பொருள் வாங்கலையா? உங்க கார்டு கேன்சல் ஆகுமா? முழு உண்மை இதோ
Recommended image2
வழக்கறிஞர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு.! சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த திட்டம்.! மருத்துவ காப்பீடு திட்டம் விரைவில் அமல்.!
Recommended image3
DMart Carry Bag: டிமார்ட்டில் கேரி பேக்குக்கு பணம் கொடுக்கிறீங்களா? இந்த தீர்ப்பை தெரிஞ்சுக்கோங்க
Related Stories
Recommended image1
FD Rules: வங்கியில் பிக்சட் டெபாசிட் போட்டு இருக்கீங்களா.? விதிகள் எல்லாம் மாறிப்போச்சு.! உடனே படிங்க
Recommended image2
DA Hike 2026: அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு! ஜூலையில் அரியர்ஸ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved