MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • உஷார்..! எஸ்பிஐ வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்

உஷார்..! எஸ்பிஐ வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்

SBI Employees Strike : புதிய நியமனங்கள், பாதுகாப்பு வசதிகள், சம்பள வேறுபாடு மற்றும் NPS உள்ளிட்ட 16 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எஸ்பிஐ ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

2 Min read
Author : Raghupati R
Published : May 19 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
Image Credit : Asianet News

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சில நாட்கள் சற்றே சவாலானதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காரணம், வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறைகள். இதனால், பல லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களது அவசர வங்கிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வரும் மே 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது. அதனைத் தொடர்ந்து மே 24 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. இதற்கிடையில், எஸ்பிஐ ஊழியர்கள் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
16 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
Image Credit : Google

16 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

பின்னர், பல மாநிலங்களில் பக்ரீத் விடுமுறை காரணமாக மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் “தொடர்ந்து 6 நாட்கள் எஸ்பிஐ கிளைகள் மூடப்படுமா?” என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தியது. இந்த வேலைநிறுத்தத்தை அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி பணியாளர் கூட்டமைப்பு (AIஎஸ்பிஐSF) முன்னெடுத்து வருகிறது. ஊழியர்களின் உரிமைகள், புதிய நியமனங்கள், பாதுகாப்பு வசதிகள், பதவி உயர்வு, ஓய்வூதிய திட்ட மாற்றங்கள் உள்ளிட்ட 16 முக்கிய கோரிக்கைகளை வங்கி நிர்வாகம் கவனிக்கவில்லை என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

Related Articles

Related image1
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
Related image2
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ
34
வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்
Image Credit : Getty

வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்

குறிப்பாக ஆயுத பாதுகாப்பு பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் சமீபத்திய கொள்ளை சம்பவங்கள் குறித்து ஊழியர்கள் கடும் அதிருப்தி பதிவு செய்தனர். மேலும், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சம்பள சலுகைகள் கீழ்மட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் சங்கம் கூறியுள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

44
வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
Image Credit : Bloomberg.com

வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

இதனால் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன் சமூக ஊடக பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளித்தல் போன்ற நடவடிக்கைகளும் நடைபெற உள்ளன. இதற்கிடையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ATM, UPI, இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் கிளை சேவைகள் தேவைப்படுவோர் உடனடியாக தங்களது பணிகளை முடித்துக்கொள்ள வேண்டும் என வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
வங்கி
வங்கி விடுமுறை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை - பெங்களூரு வெறும் 90 நிமிடம்? ஆந்திரா வழியாக உருவாகும் புதிய எக்ஸ்பிரஸ்வே வேகம்!
Recommended image2
Petrol Price Hike: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! அலரும் வாகன ஓட்டிகள்..
Recommended image3
ரூ.2 லட்சம் முதலீடு... ரூ.90 ஆயிரத்திற்கும் மேல் வட்டி வருமானம்..! அசத்தும் தபால் சேமிப்பு திட்டம்
Related Stories
Recommended image1
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
Recommended image2
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved