ரூ.19,000 வரை சம்பளம் உயர்வு! அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வுடன் வந்த நல்ல செய்தி
மத்திய அரசு ஊழியர்கள் எட்டாவது ஊதியக் குழுவுக்காகக் (8th Pay Commission) காத்திருக்கிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க உள்ளது. எட்டாவது ஊதியக் குழுவின் கீழ் யாருக்கு எவ்வளவு பணம் அதிகரிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இது அவர்களின் சம்பளத்தில் ஒரு சிறிய அதிகரிப்பை ஏற்படுத்தும்.
8th Pay Commission
எட்டாவது ஊதியக் குழு
அரசாங்கம் 2026 ஆம் ஆண்டில் இதை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால் எந்த மாதத்தில் இது நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Salary Hike
சம்பளம் உயர வாய்ப்பு
எட்டாவது ஊதியக் குழுவின் கீழ் யாருக்கு எவ்வளவு பணம் அதிகரிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. அந்தத் தொகை சும்மா இல்லை.
DA Hike
ரூ.19,000 வரை சம்பளம் உயரலாம்
எட்டாவது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டால், மாதாந்திர சம்பளம் ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை அதிகரிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission News
2025 ஏப்ரலில் 8வது ஊதியக் குழு அமைக்கப்படலாம்
அரசாங்கம் 2025 ஏப்ரலில் 8வது ஊதியக் குழுவை அமைக்கலாம் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027 இல் செயல்படுத்தப்படலாம் என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.
Modi govt
சராசரி மாத சம்பளம் ரூ.1 லட்சம்
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் சராசரி மாத சம்பளம் ரூ.1 லட்சம். எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு இது 14-19% வரை அதிகரிக்கலாம்.
Central Govt Employee
ரூ.18,800 வரை உயர்வு
அரசாங்கம் ரூ.1.75 லட்சம் கோடி பட்ஜெட் வைக்க திட்டமிட்டால், சம்பளம் ரூ.14,600 அதிகரிக்கும். அதேபோல், ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அது ரூ.16,700 ஆகவும், ரூ.2.25 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.18,800 ஆகவும் அதிகரிக்கலாம்.
Central Govt Employee Da Hike
ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்
இந்த ஊதியக் குழுவின் மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.
Salary Hike
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் உயர்வு
ஏழாவது ஊதியக் குழுவின் போது, அரசாங்கம் ரூ.1.02 லட்சம் கோடி செலவிட்டது, ஆனால் இந்த முறை பட்ஜெட் அதிகமாக இருக்கலாம்.
இனி இவர்களுக்கு கேட்காமலேயே லோயர் பெர்த் கிடைக்கும்! ரயில்வேயின் புது ரூல்ஸ் தெரியுமா?