இனி இவர்களுக்கு கேட்காமலேயே லோயர் பெர்த் கிடைக்கும்! ரயில்வேயின் புது ரூல்ஸ் தெரியுமா?
ரயில்களில் லோயர் பெர்த்களை விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்தியன் ரயில்வே புதிய விதியை கொண்டு வந்துள்ளது.

Change in train travel rules: Important announcement for women: இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ரயிலில் பயணம் செய்யும் போது லோயர் பெர்த்களை முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள்.
Indian Railways
ஆனால் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால், அவர்களுக்கு லோயர் பெர்த்கள் கிடைப்பதில்லை. இதனால் ரயில்களில் லோயர் பெர்த்தை பெறுவதற்கு மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படாதபாடு படுகின்றனர். இந்நிலையில், ரயில் பயணத்தை மிகவும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Train Lower Berth
அதாவது மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது லோயர் பெர்த் விருப்பத்தை கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு லோயர் பெர்த் ஒதுக்கும் வகையில் இந்தியன் ரயில்வே புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''ரயில்வே முன்பதிவு முறை இப்போது மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற தகுதியான பயணிகளுக்கு கீழ் பெர்த்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.
Change in train travel rules
ரயில்வே அமைச்சர் கூறியபடி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கீழ் பெர்த்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சிறப்பு வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யும் போது இவர்கள் ஒரு குறிப்பிட்ட லோயர் பெர்த் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் தன்மையைப் பொறுத்து கீழ் பெர்த்களைப் பெறலாம்.
புதிய விதிகளின்படி இனி ரயில்வேயில் கீழ் பெர்த்கள் காலியாக இருந்தால் அவை மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 லோயர் பெர்த்கள் உள்லன. ஏசி வகுப்பு 3 டயர் பெட்டியில் (3AC) இல் ஒரு பெட்டிக்கு 4 முதல் 5 லோயர் பெர்த்கள் உள்ளன.
ஏசி வகுப்பு பெட்டியில் 2 டயர் (2AC) இல் ஒரு பெட்டிக்கு 3 முதல் 4 லோயர் பெர்த்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.599க்கு விமான டிக்கெட்! அதுவும் பிரீமியம் கிளாஸ்! நடுத்தர மக்களும் ஜாலியாக பறக்கலாம்!