MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தமிழ்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடா? அடுத்த 60 நாட்களில் என்ன மாற்றம் வரும்? இனி விலை குறையுமா?

தமிழ்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடா? அடுத்த 60 நாட்களில் என்ன மாற்றம் வரும்? இனி விலை குறையுமா?

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் பொன்னி, இட்லி அரிசி உள்ளிட்ட பல்வேறு ரகங்களின் விலை மூட்டைக்கு சுமார் ரூ.300 வரை உயர்ந்துள்ளது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 16 2026, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு காரணம்
Image Credit : X

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு காரணம்

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை வேகமாக அதிகரித்து வருகிறது. திடீரென அரிசி விலை உயர்வதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? மேலும் அரிசி விலை உயருமா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

அரிசி நமது பிரதான உணவு என்பதால், அரிசி விலை தமிழ்நாடு முழுவதுமே முக்கியமாகப் பேசப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது நாம் அரிசி உணவை எடுத்துக்கொள்கிறோம். எனவே அரிசி விலையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் நம் வீட்டுப் பட்ஜெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொன்னி, இட்லி அரிசி, பச்சரிசி என மக்கள் அதிகம் பயன்படுத்தும் பல்வேறு ரக அரிசிகளின் விலையும் ஒரு மூட்டைக்கு சுமார் 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தமிழ்நாடு அரிசி விலை நிலவரம்
Image Credit : X

தமிழ்நாடு அரிசி விலை நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத கால அளவில் தான் அரிசி விலை இப்படி அதிகரித்துள்ளது. இன்னும் வரும் நாட்களிலும் அரிசி விலை உயரும் எனவே மக்கள் அரிசி மூட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் உண்மையில் அரிசி தட்டுப்பாடு இருக்கிறதா? அரிசி விலை மேலும் உயருமா என்பது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. துளசிமணி அவர்களைத் தொடர்பு கொண்டது குட் ரிட்டர்ன்ஸ் தமிழ். அப்போது அவர் பல்வேறு தகவல்களை விளக்கமாகப் பகிர்ந்தார்.

34
பொன்னி அரிசி விலை நிலவரம்
Image Credit : X

பொன்னி அரிசி விலை நிலவரம்

தமிழ்நாட்டில் உயர்தரம் கொண்ட பொன்னி அரிசி 25 கிலோ மூட்டையின் விலை 2050 ரூபாயில் இருந்து 2300 ரூபாயாக உயர்ந்துள்ளது என அவர் கூறியுள்ளார். அதுவும் கடந்த ஒரு மாத காலத்தில் தான் அரிசி விலை வேகமாக அதிகரித்தது என்கிறார். குறிப்பிட்ட சில வகை அரிசி ரகம் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்தது எனச் சுட்டிக்காட்டினார்.

மேற்கொண்டு அரிசி விலை ஏற வாய்ப்பு எனக் கூறியுள்ள துளசிமணி, 2-ம் பருவ நெல் பயிர்கள் வந்தவுடன் அரிசி விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு போக நெல் விளைச்சலுக்குத் தான் பயன்படுத்த முடிந்தது. இதனால் தான் அரிசி வரத்து குறைந்து விலை ஏறியது என்கிறார். இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் இல்லாமல் போனது முக்கிய காரணம் என கூறுகிறார்.

44
இனி விலை குறையுமா?
Image Credit : X

இனி விலை குறையுமா?

மழை பெய்து தற்போது தொடங்கும் நெல் சாகுபடி கை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். மேற்கொண்டு அரிசி விலை ஏறுவதற்கு வாய்ப்பில்லை என கூறும் அவர் அடுத்த 2 மாதங்களில் புது அரிசி வரத் தொடங்கும் எனவே விலை குறையும் வாய்ப்பு உண்டாகும் என கூறுகிறார்.

தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என கூறும் அவர் குறுவை சாகுபடி தந்த ஏமாற்றமே இந்த நிலைக்கு காரணம் என்றும் தற்போது போடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாகுபடி அடுத்த 60 நாட்களில் தொடங்கும் என்றும் அதன் பின் அரிசி விலை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Shopping Tips: மாதம் ரூ.5,000 மளிகைச் செலவா? டிமார்ட்டில் இப்படி வாங்கினால் ரூ.2,500 மிச்சமாகுமா? யாரும் சொல்லாத ஷாப்பிங் டிப்ஸ்!
Recommended image2
TN Govt Grocery Sale: ரூ.60-க்கு பொன்னி அரிசி.. ரூ.130-க்கு துவரம் பருப்பு! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. எங்கே வாங்கலாம்?
Recommended image3
UPI பேமெண்ட் முதல் மளிகை வரை.. Google Pay-ல் கேஷ்பேக் மழை! மெகா ஆஃபர்!
Related Stories
Recommended image1
Cheap Flight Tickets: ரயிலை விட குறைந்த விலையில் விமான‌ டிக்கெட் புக் பண்ண சூப்பர் ட்ரிக்ஸ்!
Recommended image2
19 ஆர்டர், 51 கி.மீ அலைச்சல்... பிளிங்கிட் டெலிவரிபாயான சட்டக் கல்லூரி மாணவன்; முதல் நாளில் சம்பாதித்தது இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved