MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 19 ஆர்டர், 51 கி.மீ அலைச்சல்... பிளிங்கிட் டெலிவரிபாயான சட்டக் கல்லூரி மாணவன்; முதல் நாளில் சம்பாதித்தது இவ்வளவுதானா?

19 ஆர்டர், 51 கி.மீ அலைச்சல்... பிளிங்கிட் டெலிவரிபாயான சட்டக் கல்லூரி மாணவன்; முதல் நாளில் சம்பாதித்தது இவ்வளவுதானா?

6.5 மணி நேரம், 19 ஆர்டர்கள், 51 கி.மீ சவாரி... படிப்புச் செலவிற்காக பிளிங்கிட் டெலிவரியில் இறங்கிய சட்ட மாணவன் ஈட்டிய முதல் நாள் வருமானம் எவ்வளவு? வைரல் பதிவின் முழு விவரம், இணையத்தில் வெடித்த விவாதம்!

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 15 2026, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிளிங்கிட் ல் களமிறங்கிய சட்டக்கல்லூரி மாணவன்
Image Credit : x

பிளிங்கிட்-ல் களமிறங்கிய சட்டக்கல்லூரி மாணவன்

கையில் சட்டப் புத்தகங்களோடு நீதிமன்றப் படிகளை நோக்கி நடக்க வேண்டிய ஒரு மாணவன், தன் படிப்புச் செலவிற்காக கையில் பிளிங்கிட் (Blinkit) மளிகைப் பையோடு வீதி வீதியாக வலம் வந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டப்படிப்பு (LLB) படித்து வரும் கவல் தேசாய் என்ற மாணவர், தன் சுயமரியாதையையும் கல்விச் செலவையும் சுயமாகச் சுமக்க முடிவு செய்தார். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல், உடனடி மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் பிளிங்கிட் நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராகத் தனது முதல் நாளைத் தொடங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல் நாள் சவாரி: மீட்டரும் வருமானமும்!
Image Credit : x

முதல் நாள் சவாரி: மீட்டரும் வருமானமும்!

சுமார் 6 மணி நேரம் 30 நிமிடங்கள்... 19 ஆர்டர்கள்... ஏறக்குறைய 51 கிலோமீட்டர் பயணம் (திரும்பி வந்த தூரத்தைக் கணக்கிடாமல்). அந்த நாளின் இறுதியில் அவரது உழைப்புக்குக் கிடைத்த ஊதியம் எவ்வளவு தெரியுமா? வழக்கமான வருமானம் ரூ.508 (இதில் ரூ.75 போனஸ் அடங்கும்) இலக்கை எட்டியதற்காக கிடைத்த போனஸ் ரூ.100, மொத்தக் கணக்கு ரூ.608. அவரிடம் இருந்த ‘ஏத்தர்’ (Ather) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

வீட்டிலேயே சார்ஜ் செய்து கொண்டதால், பெட்ரோல் செலவு என்று 1 ரூபாய் கூடக் குறையாமல் உழைத்த பணம் முழுக்கக் கையில் நின்றது. ஒருபுறம் வண்டியின் பேட்டரி குறையத் தொடங்கியது; மறுபுறம் படிப்பதற்கான நேரமும் நெருங்கியது. உடனே திருப்தியுடன் அன்றைய டெலிவரியை முடித்துக் கொண்டார். தன்னுடைய டெலிவரி பேக் மற்றும் அன்றைய வருமானத்தைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டை X தளத்தில் பகிர்ந்து, மாணவர்கள் பகுதிநேரமாக உழைக்க பிளிங்கிட்டின் கட்டமைப்பு மிகவும் ஏதுவாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.

34
இணையத்தை உலுக்கிய ‘கிக் எகானமி’ விவாதம்
Image Credit : x

இணையத்தை உலுக்கிய ‘கிக் எகானமி’ விவாதம்

மாணவனின் இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்ததோடு, இந்தியாவில் உள்ள ‘கிக் வேலைவாய்ப்புகள்’ (Gig Economy) குறித்த ஆழமான விவாதத்தையும் கிளப்பியது. வெளிநாடுகளைப் போல மாணவர்கள் பாக்கெட் மணிக்காகச் செய்ய வேண்டிய இந்த டெலிவரி வேலை, இந்தியாவில் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பலரின் முழுநேரக் கண்ணீர்த் தொழிலாக மாறிவிட்டது என்று ஆதங்கப்பட்டார் ஒருவர். நான் ஊபர் பைக்கிலும், ஸ்விக்கியிலும் இரவும் பகலுமாக ஓட்டியும் கூட என்னால் சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணத்தை கட்ட முடியவில்லை என்று தன் கண்ணீர் அனுபவத்தை இறக்கி வைத்தார் இன்னொருவர்.

44
பகுதிநேர வேலையில் இத்தனை சவால்களா?
Image Credit : x

பகுதிநேர வேலையில் இத்தனை சவால்களா?

வெயிலிலும் மழையிலும் 6 மணி நேரம் சாலையில் அலைந்து உடலைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, கேட்டரிங் போன்ற வேலைகளில் இறங்கினால் நல்ல வருமானத்தோடு இலவச உணவும் மிச்சமாகும் என மற்றொருவர் நடைமுறை ஆலோசனையைக் கூறினார். சுய உழைப்பில் நம்பிக்கை வைத்து, எதையும் இழக்காமல் கல்வியையும் வேலையையும் சமமாகத் தூக்கி நிறுத்தும் இந்தக் கல்லூரி மாணவனின் விடாமுயற்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Post Office Scheme: வெறும் ரூ.2 செலவில் ரூ.15 லட்சம் காப்பீடு.. Post Officeன் சூப்பர் டூப்பர் ஸ்கீம்
Recommended image2
Gold Loan: அடிக்கடி நகைக்கடன் வாங்குறீங்களா..? ஆபத்தில் சிக்கும் 2ல் ஒருவர்.. வெளியான ஷாக் ரிபோர்ட்
Recommended image3
தினமும் 2.5GB டேட்டா! 3 வருஷத்துக்கு ரீசார்ஜே வேண்டாம்.. ஒரு நாளைக்கு ரூ.9 மட்டுமே! Jioவின் அதிரடி!
Related Stories
Recommended image1
Chennai Budget Shopping: டிமார்ட், ஜியோமார்ட் மட்டுமல்ல! சென்னையில் இந்த சந்தைகளுக்குப் போங்க… குறைந்த விலையில் அள்ளிக்கிட்டு வரலாம்!
Recommended image2
எல்.ஐ.சி-யின் 3 அதிரடி புதிய திட்டங்கள்: பாலிசிதாரர்களுக்கு அடிக்கப் போகுது ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved