MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தேங்காய் முதல் பவர் பேங்க் வரை.. விமானத்தில் எதற்கெல்லாம் 'நோ' என்ட்ரி? முழு லிஸ்ட்!

தேங்காய் முதல் பவர் பேங்க் வரை.. விமானத்தில் எதற்கெல்லாம் 'நோ' என்ட்ரி? முழு லிஸ்ட்!

Prohibited Items in Flights: விமானங்களில் என்னென்ன உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடை? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 30 2026, 05:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விமானங்களில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல தடை
Image Credit : X

விமானங்களில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல தடை

இந்தியாவில் சுற்றுலாவுக்காவும், படிப்பு மற்றும் வேலைக்காவும் வெளிநாடுகளுக்கு செல்வபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை, படிப்புக்காக வெளிநாடு செல்லும் பிள்ளைகளுக்காக, பெற்றோர்கள் பாசத்துடன் பலகாரஙகள், ஊறுகாய், பொடிகள் ஆகிய உணவுப் பொருட்களை கொடுத்து அனுப்புவது வழக்கம். ஆனால் விமானத்தில் நாம் நினைத்தபடி அனைத்து உணவுப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியாது. விமானத்தில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

24
100ml-க்கு அதிகமான திரவப் பொருட்களுக்கு தடை
Image Credit : Gemini AI

100ml-க்கு அதிகமான திரவப் பொருட்களுக்கு தடை

அதாவது சூப், ஜாம், தேன், சட்னி, ஜூஸ் போன்ற 100ml-க்கு அதிகமான திரவப் பொருட்களை விமான கேபின் பேக்கில் கொண்டு செல்ல முடியாது. இதில் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், குழந்தைகளின் பாலுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உண்டு. விமானத்தின் ஏசி கேபினில் கடுமையான வாசனை பரவி மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் வெங்காயம், பூண்டு, சில வகை மீன் உணவுகள் மற்றும் துரியன் (Durian) போன்ற பழங்களுக்கு பல சர்வதேச விமானங்கள் தடை விதித்துள்ளன.

Related Articles

Related image1
பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.. ரூ.1,500 கூட இல்ல.. ஏர் இந்தியா 'மெகா' ஆஃபர்!
Related image2
Flight Rules: இனி விமானத்தில் கூடுதல் கட்டணம் இல்லை, குடும்பத்தோடு ஒண்ணா உட்காரலாம்! 5 புதிய விதிகள்
34
உலர்ந்த தேங்காய் கூடவே கூடாது
Image Credit : instagram

உலர்ந்த தேங்காய் கூடவே கூடாது

உலர்ந்த தேங்காயில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அது எளிதில் தீப்பற்றக்கூடியது. தீ விபத்து அபாயத்தைக் கருத்தில் கொண்டு, விமான கேபின் பேக்கில் இதை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும், வெளிநாட்டுப் பயணங்களின்போது, புதிய பழங்கள், காய்கறிகள், விதைகளைக் கொண்டு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இவை அந்த நாட்டின் விவசாயத்தைப் பாதிக்கும் பூச்சிகள் அல்லது நோய்களைக் கொண்டு வரக்கூடும்.

44
ஊறுகாய் கொண்டு செல்லலாமா?
Image Credit : AI

ஊறுகாய் கொண்டு செல்லலாமா?

இதேபோல் விமான பயணத்தின்போது பலரும் செய்யும் தவறு, பவர் பேங்க்களை பெரிய சூட்கேஸில் (Check-in Bag) வைத்துவிடுவது. பவர் பேங்க்கள் மற்றும் லித்தியம் பேட்டரிகள் எப்போதும் கேபின் பேக்கில் மட்டுமே இருக்க வேண்டும். இவை செக்-இன் பேக்கேஜில் இருந்தால், ஸ்கேன் செய்யும்போதே கண்டறியப்பட்டு அகற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் ஊறுகாயில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அது திரவப் பொருள் (Liquid) கணக்கில் வருவதாலும், அதை கேபின் பேக்கில் வைப்பதைத் தவிர்த்து, நன்றாக பேக் செய்து செக்-இன் பேக்கில் வைப்பதே சிறந்தது.

இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளுக்கு தடை

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை, இறக்குமதி செய்யப்படும் இறைச்சி, சீஸ் அல்லது பால் பொருட்களை அனுமதிப்பதில்லை. உங்கள் பைகளை பேக் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸின் இணையதளத்தில் உள்ள 'Prohibited Items' பட்டியலை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். உணவுகளை எடுத்துச் செல்லும்போது 'Vacuum Sealed' செய்யப்பட்ட பாக்கெட்டுகளை பயன்படுத்துவம் முக்கியம். நீங்கள் எடுத்து செல்லும் பொருட்களில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பது அபராதத்தை தவிர்க்க உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானூர்திப் பயணங்கள்
இந்தியா
பயணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chemically Ripened Mangoes: உஷார்! நீங்கள் வாங்கும் மாம்பழம் இனிப்பானதா? அல்லது விஷமானதா?
Recommended image2
Credit Card Rules Offer: கிரெடிட் கார்டு யூசர்களுக்கு குட் நியூஸ்! இனி இஷ்டத்துக்கு அபராதம் போட முடியாது - RBI அதிரடி!
Recommended image3
Best Online Business Ideas in Tamil: குறைத்த முதலீட்டில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம்!
Related Stories
Recommended image1
பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.. ரூ.1,500 கூட இல்ல.. ஏர் இந்தியா 'மெகா' ஆஃபர்!
Recommended image2
Flight Rules: இனி விமானத்தில் கூடுதல் கட்டணம் இல்லை, குடும்பத்தோடு ஒண்ணா உட்காரலாம்! 5 புதிய விதிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved