- Home
- Business
- பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.. ரூ.1,500 கூட இல்ல.. ஏர் இந்தியா 'மெகா' ஆஃபர்!
பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.. ரூ.1,500 கூட இல்ல.. ஏர் இந்தியா 'மெகா' ஆஃபர்!
ஏர் இந்தியா விமான நிறுவனம் நடுத்தர மக்களுக்கும் விமானத்தில் பறக்கும் வகையில் டிக்கெட் கட்டண தள்ளுபடி சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த மெகா ஆஃபர் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏர் இந்தியா சிறப்பு சலுகை டிக்கெட் விற்பனை
இந்தியாவில் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. பணக்காரர்கள் எளிதில் விமானங்களில் பயணம் செய்யும் நிலையில், நடுத்தர மக்களும் விமானங்களில் பயணம் செய்யும் வகையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் நமஸ்தே வேர்ல்ட் (Namaste World) என்னும் சிறப்பு தள்ளுபடி டிக்கெட் விற்பனையை இன்று (பிப்ரவரி 3) தொடங்கியுள்ளது.
ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி
இதன்மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ஏர் இந்தியா உள்நாட்டு விமானத்தில் ரூ.1,499 க்கு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். ஏர் இந்தியா வெளிநாட்டு விமானத்தில் ரூ.5,033க்கு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளை பெற பிப்ரவரி 5ம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பிப்ரவரி 11ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பயணம் செய்து கொள்ளலாம்.
தேதி மாற்றும் வசதியும் உள்ளது
இந்த சலுகையில் தேதி மாற்றும் வசதியும் உள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனை காலத்தில் முன்பதிவு செய்யப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் ஒருமுறை இலவசமாகத் தேதியை மாற்றிக் கொள்ளலாம். விமானம் புறப்படும் 72 மணி நேரத்துக்குள் தேதியை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த தேதி மாற்றம் என்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கே பொருந்தும் என்பதும் தேதி மாற்றத்திற்கான அபராத கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி
இதன்மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ஏர் இந்தியா உள்நாட்டு விமானத்தில் ரூ.1,499 க்கு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். ஏர் இந்தியா வெளிநாட்டு விமானத்தில் ரூ.5,033க்கு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளை பெற பிப்ரவரி 5ம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பிப்ரவரி 11ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பயணம் செய்து கொள்ளலாம்.
ஏர் இந்தியா செயலி வாயிலாகவும் சூப்பர் சலுகை
ஏர் இந்தியா இணையதளம் அல்லது ஏர் இந்தியா செயலில் வாயிலாக FLYAI என்ற Promo Code பயன்படுத்தி டிக்கெட் புக் செய்தால் ஒரு முன்பதிவுக்கும் கூடுதலாக ரூ.3,000 வரை தள்ளுபடி பெற முடியும். நெட் பேங்கிங் மூலம் NBPROMO என்ற Promo Code பயன்படுத்தி டிக்கெட் புக் செய்தால் உள்நாட்டு பயணத்துக்கு ரூ.1000மும், வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.2,000மும் தள்ளுபடி பெற முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.