வட்டி மூலம் 2 லட்சம் வருமானம்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!
Post Office Time Deposit Scheme: போட்ஸ் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், முதலீடு செய்வதற்கு அரசாங்கம் 7.5 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

Post Office Time Deposit Scheme
ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து, அந்தப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த வகையில், முதலீட்டாளர்கள் மத்தியில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இவற்றில் சிறிய தொகையை முதலீடு செய்தாலும் நல்ல லாபம் ஈட்டலாம். அத்தகைய ஒரு பட்ஜெட் திட்டமானது போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் ஆகும், இதில் நல்ல வட்டியும் அளிக்கப்படுகிறது.
Five-Year Time Deposits
குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்கும் சிறப்பான தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம், வலுவான வருமானம், பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றுடன் வரி விலக்கும் வழங்குகிறது, இந்த திட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
Post Office Schemes
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ், நீங்கள் வெவ்வேறு காலங்களுக்கு முதலீடு செய்யலாம். இதில், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம். ஒரு வருடத்திற்கான முதலீட்டுக்கு 6.9 சதவிகிதம் வட்டியும், 2 அல்லது 3 வருடங்கள் முதலீடு செய்தால் 7 சதவிகிதம் வட்டியும் கிடைக்கும். 5 ஆண்டுகள் முதலீடு செய்தால், 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
Post Office Time Deposit for 5 Years
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்டில், ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு 5 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், 7.5% வட்டி விகிதத்தில், 2,24,974 ரூபாய் வட்டி கிடைக்கும். அதே சமயம், முதிர்வு காலத்தில் மொத்தத் தொகையாக ரூ.7,24,974 ஆக பெறலாம். அதாவது வட்டியில் மட்டும் ரூ.2 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
Post Office Time Deposit Tax Benefits
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், வருமான வரித் துறைச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வாடிக்கையாளருக்கு வரி விலக்குப் பலனும் வழங்கப்படுகிறது. இந்தச் சேமிப்புத் திட்டத்தில் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம்.
Post Office Time Deposit Scheme Interest Rate
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் கணக்கை அவரது குடும்ப உறுப்பினர் மூலம் தொடங்கலாம். குறைந்தபட்சம், 1,000 ரூபாயில் இருந்து கணக்கு தொடங்கலாம். முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. அதாவது நீங்கள் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு வட்டி வருமானம் அதிகரிக்கும். வட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும்.