ரூ.1000 போதும்.. டீக்கடை, ஹோட்டலில் சாப்பிடுற காசை இதுல போடுங்க.. பணம் டபுளாகும்.!
தபால் நிலையத்தின் (Post Office Scheme) கிசான் விகாஸ் பத்திரம் (KVP) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு பாதுகாப்பான, நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.

தபால் சேமிப்பு திட்டம்
பணம் பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் வளர வேண்டுமா? அப்படியானால் தபால் நிலையத்தின் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) திட்டம் உங்களுக்காகவே. இது அரசாங்கம் உறுதி அளிக்கும் நீண்டகால சேமிப்பு திட்டமாகும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இந்த திட்டம், எந்த அபாயமும் இல்லாமல் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த வாய்ப்பாகும்.
ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம்
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்தால் போதும். அதன் பிறகு ரூ.100 மடங்கு பணம் சேர்க்கலாம். அதிகபட்ச வரம்பு ஏதுமில்லை. தற்போதைய வட்டி விகிதம் வருடத்திற்கு 7.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (வருடாந்திரக் கூட்டல் வட்டி). இதன் சிறப்பு என்னவென்றால், 115 மாதங்களில் அதாவது 9 வருடம் 7 மாதங்களில் உங்கள் முதலீட்டு தொகை இரட்டிப்பாக மாறும்.
யார் கணக்கு திறக்கலாம்?
கிசான் விகாஸ் பத்திரம் கணக்கை தனிப்பட்ட நபர் தனது பெயரில் திறக்கலாம். மூவர்வரை சேர்ந்து ‘ஜாய்ண்ட் அக்கவுண்ட்’ திறக்கலாம். Joint-A வகை கணக்கை அனைத்து நபர்களும் இணைந்து இயக்க வேண்டும். Joint-B வகை கணக்கை யாராவது ஒருவரால் தனியாக இயக்க முடியும். சிறாரின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கு திறக்கலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட சிறாரே தாமாகவே தங்கள் கணக்கை இயக்கும் வசதியும் உள்ளது.
பணம் இரட்டிப்பு திட்டம்
சில விசேஷ சூழ்நிலைகளில், KVP கணக்கை அதன் முடிவு காலத்திற்கு முன் மூடலாம். அதில், ஒரே நபர் வைத்திருக்கும் கணக்கில் அவர் இறந்துவிட்டால், அல்லது கூட்டுக் கணக்கில் ஒருவர் அல்லது அனைவரும் இறந்துவிட்டால் மூடலாம். மேலும், நீதிமன்ற உத்தரவு அல்லது அரசாணை மூலம் உறுதி செய்யப்பட்டால் கூட கணக்கு முடிக்கப்படும். எனவே, பாதுகாப்பான வருமானத்தை விரும்புவோருக்கு KVP திட்டம் சிறந்த தேர்வாகும்.