மாதம் ரூ.5000 சேமித்தால் ஈசியா 8 லட்சம் சேர்க்கலாம்! சூப்பர் திட்டம் இதோ!
Post Office Recurring Deposit: அஞ்சல் அலுவலகம் அனைத்து வயதினருக்கும், அனைத்து வகுப்பினருக்கும் ஏற்ற சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை பாதுகாப்பான முதலீட்டை உறுதி செய்வது மட்டுமல்லாமல் சிறந்த வருமானத்தையும் வழங்குகின்றன. அந்த வகையில் தொடர் வைப்பு நிதித் திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் (Recurring Deposit Scheme) பாதுகாப்பான முதலீட்டு ஒரு சிறந்த தேர்வாகும்.

Post Office Recurring Deposit Scheme
ஒவ்வொருவரும் தங்கள் சம்பாத்தியத்திலிருந்து ஒரு தொகையைச் சேமித்து, பாதுகாப்பும் நல்ல வருமானமும் உள்ள இடத்திலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில், தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் அனைவருக்கும் ஏற்ற திட்டம் ஆகும்.
தபால் அலுவலக RD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ. 8 லட்சம் வரை திரட்டலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் கடன் பெறுவதும் எளிது.
Post Office Recurring Deposit Interest Rate
கடந்த 2023ஆம் ஆண்டிலேயே, அரசாங்கம் தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது. இந்த புதிய விகிதங்கள் அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டு முதல் நடைமுறைக்கு வந்தன. இப்போது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது.
தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் திருத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தில் கடைசியாக செப்டம்பர் 29, 2023 அன்று திருத்தம் செய்யப்பட்டது.
Post Office Recurring Deposit Benefits
தபால் அலுவலக RD திட்டத்தில் முதலீடு மற்றும் வட்டியைக் கணக்கிடுவது மிகவும் எளிதானது. இந்தத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.5000 மட்டும் சேமித்து ரூ.8 லட்சம் நிதி திரட்டுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், அதன் முதிர்வு காலத்தில், அதாவது ஐந்து ஆண்டுகளில், நீங்கள் மொத்தம் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்திருப்பீர்கள். மேலும் 6.7 சதவீத விகிதத்தில் ரூ.56,830 வட்டியும் சேர்க்கப்படும். அதாவது, மொத்தத்தில். ஐந்து ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ.3,56,830 ஆகப் பெருகியிருக்கும்.
Post Office Recurring Deposit Rules
5 ஆண்டுகளில் முதலீட்டை நிறுத்த வேண்டியதில்லை. இந்த RD கணக்கை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரெக்கரிங் டெபாசிட் கணக்கை நீட்டித்து மாதம் ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ. 6,00,000 ஆக இருக்கும். இதனுடன், 6.7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2,54,272 வட்டியும் கிடைக்கும். இதன் மூலம் 10 ஆண்டுகளில் முதிர்வுத் தொகையாக ரூ. 8,54,272 பெற்றுக்கொள்ளலாம்.
Post Office Recurring Deposit Maturity
அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திற்குச் சென்று ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். தபால் அலுவலக RD திட்டத்தின் அடிப்படை முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் இந்தக் காலம் முடிவதற்குள் கணக்கை மூட விரும்பினால், அதற்கும் இந்த வசதி உள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின் மேலும் 5 ஆண்டுகள் வீதம் நீட்டிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
Post Office Recurring Deposit Eligibility
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் சேரும் முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சியடையாமலே கணக்கை மூடலாம். இந்தத் திட்டத்தில் செய்யும் முதலீட்டின் அடிப்படையில் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. கணக்கில் ஒரு வருடம் தொடர்ந்து டெபாசிட் செய்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். ஆனால், இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் RD கணக்கில் கிடைக்கும் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகமாக இருக்கும்.