இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தா நீங்க லக்கி.. கடன் வட்டி அதிரடி குறைப்பு
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை மாற்றாமல் வைத்திருந்தாலும், சில வங்கிகள் MCLR வட்டியைக் குறைத்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்களின் EMI சுமை குறையும். புதிய கடன்கள் EBLR அடிப்படையில் வழங்கப்படும்.

கடன் வட்டி விகிதம் குறைப்பு
ஆகஸ்ட் 6, 2025 அன்று நடந்த ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (ஆர்பிஐ)யின் நாணயக் கொள்கை (MPC) கூட்டத்தில் ரெப்போ ரேட் 5.5% ஆக மாறாமல் வைத்திருந்தாலும், இந்த இரண்டு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்மை செய்யும் வகையில் MCLR-ஐ குறைக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ
MCLR என்பது வங்கிகள் நிர்ணயிக்கும் அடிப்படை வட்டி விகிதம். இதைப் பொருத்தே வீட்டு கடன், தனிநபர் கடன், கார் கடன் போன்ற floating rate loans வட்டி கணக்கிடப்படும். MCLR குறைந்தால் EMI தொகையும் குறையும். இதனால் கடன் திருப்பிச் செலுத்தும் சுமை வாடிக்கையாளர்களுக்கு குறைகிறது.
பழைய கடன்கள்
ஆனால் புதிய floating rate loans கள் இனி MCLR அடிப்படையில் வழங்கப்படாது. புதிய கடன்கள் அனைத்தும் EBLR (External Benchmark Lending Rate) அடிப்படையில் இருக்கும். பழைய MCLR வாடிக்கையாளர்களும் தங்கள் கடன்களை EBLR-க்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
பஞ்சாப் நேஷனல் வங்கி
செப்டம்பர் 1, 2025 முதல், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா (BoI) வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யமான தகவலை அறிவித்துள்ளனர். இந்த இரண்டு வங்கிகளும் தங்கள் கடன் வட்டிகளை குறைக்கின்றன. இதனால் வீட்டு கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் எடுக்கும் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெறுகின்றனர்.
பேங்க் ஆஃப் இந்தியா
PNB தனது MCLR (நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு விலை) வட்டியை அதிகபட்சம் 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், BoI 5 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை அனைத்து கால அவகாசங்களிலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே இரவில் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் மூலம் கடன் எடுக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த EMI மூலம் சுமையைக் குறைக்க முடியும்.