இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 கிடைக்கும்! அரசின் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
PM Internship Scheme Launched
பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு நேற்று தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் கிடைக்கும். நிறுவனங்கள் நவம்பர் 27 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வை மேற்கொள்ளும். டிசம்பர் 2, 2024 முதல் தொடங்கும் இந்த இண்டர்ன்ஷிப் 12 மாதங்களுக்கு நடைபெறும். இந்த திட்டத்தின் நன்மைகள், எப்படி விண்ணப்பிப்பது என்று விரிவாக பார்க்கலாம்
இளைஞர்களை வேலைவாய்ப்புடன் உருவாக்கும் நோக்கத்துடன், பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா என்ற முன்னோடி திட்டத்தை மத்திய அரசு நேற்று வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் முன்மொழிந்தார்.
இத்திட்டத்தின் கீழ், இளைஞர்கள் இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
PM Internship Scheme Launched
இது தவிர, பயிற்சியில் சேர ஒருமுறை உதவியாக ரூ.6,000 வழங்கப்படும். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும். இன்டர்ன்ஷிப் 12 மாதங்கள் இருக்கும். நடப்பு நிதியாண்டில் 1.25 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த திட்டத்திற்கு 800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், பல நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன, சில நாட்களுக்கு முன்பு பயண முன்பதிவு தளமான EaseMyTrip அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தை ஆதரிக்க அடுத்த 3-6 மாதங்களில் இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
PM Internship Scheme Launched
அக்டோபர் 12 முதல் போர்ட்டல் செயல்படும்
அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் தங்களின் தேவைகள் மற்றும் இன்டர்ன்ஷிப் இடுகைகள் பற்றிய தகவல்களை வழங்கும். ஆர்வமுள்ள இளைஞர்கள் அக்டோபர் 12 நள்ளிரவு முதல் www.pminternship.mca.gov.in என்ற போர்ட்டலில் பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: யார் விண்ணப்பிக்கலாம்?
10வது தேர்ச்சி சான்றிதழ் பெற்ற 21 முதல் 24 வயது வரை உள்ள எந்த இளைஞரும் PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: யார் விண்ணப்பிக்க முடியாது?
அரசுப் பணியில் இருக்கும் குடும்ப உறுப்பினர் அல்லது குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் அல்லது முழு நேர வேலையில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
PM Internship Scheme Launched
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: விண்ணப்பிக்கும் முறை
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் அதன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், அதில் உங்கள் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் பற்றிய தகவல்களை வழங்கலாம். அதன் பிறகு, உங்கள் தகுதியின் அடிப்படையில் நீங்கள் எங்கு இன்டர்ன்ஷிப் செய்யலாம் என்பது முடிவு செய்யப்படும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: என்ன ஆவணங்கள் தேவை?
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஆதார் அட்டை, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், முகவரிச் சான்று, கல்வி விவரங்கள் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
PM Internship Scheme Launched
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: எப்போது விண்ணப்பிக்கலாம்?
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான பிரத்யேக போர்டல் இன்று, அக்டோபர் 3 முதல் செயல்படும். இருப்பினும், அதிகாரப்பூர்வ விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 12 முதல் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நவம்பர் 27 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வை மேற்கொள்ளும் மற்றும் இன்டர்ன்ஷிப் டிசம்பர் 2, 2024 முதல் 12 மாதங்களுக்குத் தொடங்கும்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியத்தை அரசே செலுத்தும். இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு நிறுவனங்கள் கூடுதல் விபத்து காப்பீட்டை வழங்கும்..